சரத்குமார், மீனா இணைந்து கலக்கிய 5 படங்கள்.. நாட்டாமை தம்பி பசுபதியை மறக்க முடியுமா?

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் இரண்டு படங்களில் ஜோடியாக நடிப்பது அபூர்வம். ஆனால் சரத்குமார், மீனா ஜோடியாக இணைந்து நடித்த ஐந்து திரைப்படங்கள் இருக்கிறது. அதிலும் சில படங்களில் சரத்குமார் இரட்டை வேடங்களிலும், மீனா இரட்டை வேடங்களிலும் நடித்திருப்பார். அதுவே இவர்களின் சிறப்பு என்றே கூறலாம். அந்தப் படங்களை பற்றி பார்க்கலாம்.

மாயி: சூரிய பிரகாஷ் இயக்கத்தில் 2000ம் ஆண்டு மாயி திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், மீனா, வடிவேலு ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் சரத்குமார் மாயாண்டியாகவும், மீனா புவனேஸ்வரி ஆகவும் நடித்திருக்கிறார்கள். இதில் வடிவேலு மொக்கச்சாமி என்ற கதாபாத்திரத்தில் மூலம் காமெடி செய்திருக்கிறார். இதில் இவரின் நகைச்சுவையை ரசிகர்கள் அதிக அளவில் ரசித்தனர். அதிலும் “வாமா மின்னலே” வரும் காட்சிகள் மிகவும் பிரபலமானது. இப்படம் மாபெரும் வெற்றி படமாக ஆனது.

Also read: சூப்பர் ஸ்டார் புகழ் சரத்குமார் வில்லனாக நடித்த 5 படங்கள்.. மிஸ்டர் சென்னை வென்றதால் வந்த வாய்ப்பு

நாடோடி மன்னன்: மணிவாசகம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு நாடோடி மன்னன் என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், மீனா, ரகுவரன், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்தார்கள்.  இதில் மீனா இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படம் இவர்களுக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

கூலி: பி.வாசு இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு கூலி திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், மீனா, ராதாரவி, ராஜா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் சரத்குமார் கூலி வேலை செய்யும் ஒரு தொழிலாளியாக நடித்திருப்பார்.  இப்படம் அண்ணன், தங்கையின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

Also read: மொத்த குடும்பத்தையும் ஒத்த ஆளா தாங்கும் மருமகள்.. தனத்துக்கே பயங்கர டஃப் கொடுக்கும் மீனா

ரிஷி: சுந்தர் சி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ரிஷி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சரத்குமார், மீனா, சங்கவி, பிரகாஷ்ராஜ் மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இதில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் மக்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.

நாட்டாமை: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு நாட்டாமை திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், மீனா, குஷ்பூ, மனோரமா மற்றும் சங்கவி ஆகியோர் நடித்தார்கள். இதில் சரத்குமார், நாட்டாமை சண்முகம் மற்றும் பசுபதி என்று இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் பசுபதியின் மனைவியாக மீனா நடித்தார். இப்படம் கிராமங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் விதமாக நீதி வழங்குவதற்கு பஞ்சாயத்து தலைவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் கவுண்டமணி, செந்தில் செய்யும் காமெடி மிகவும் பிரபலமானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 175 நாட்கள் ஓடியது.

Also read: பட வாய்ப்பு இழந்ததால் எடுத்த முடிவு.. சீரியலில் நுழையும் நாட்டாமை படத்தின் டீச்சர்

Next Story

- Advertisement -