ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இரண்டு நாயகிகளோடு குத்தாட்டம் போட்ட 5 ஹீரோக்கள்.. அசராமல் சிம்பு அடித்த லூட்டி

சினிமாவில் படங்கள் எவ்வளவு ஹிட் ஆகிறதோ அதே அளவுக்கு பாடல்களும் பட்டித் தொட்டி எல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படி சூப்பர் ஹிட் ஆன பாடலில் சில ஹீரோக்கள் இரண்டு கதாநாயகிகளுடன் குத்தாட்டம் போட்டு செம ஹிட் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட படங்களையும், நடிகர்களையும் பற்றி பார்க்கலாம்.

கமல்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2000 ஆண்டு தெனாலி திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், ஜெயராம், தேவயானி மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்தார்கள். இப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்தது. இப்படத்தில் கமல், ஜோதிகா மற்றும் தேவயானி உடன் சேர்ந்து “அத்தினி சித்தினி” என்ற பாடலில் செம செக்ஸியாக ஒரு குத்தாட்டம் போட்டிருப்பார்கள். அத்துடன் இந்த பாடல் பெண்ணின் அழகை ஐந்து நிலங்களுடன் ஒப்பிட்டு இருப்பார்.

Also read: பிச்சைக்காரனை நம்பி இருக்கும் விஜய் ஆண்டனி.. ராசி இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்

கார்த்திக்: செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்தி “உன் மேல ஒரு ஆசைதான்” என்ற பாடலில் ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா உடன் சேர்ந்து ஆடி பெரிய அளவில் சூப்பர் ஹீட் கொடுத்திருப்பார். இப்பாடலை அண்ணன் செல்வராகனுக்காக தனுஷ் பாடியது.

விஜய் சேதுபதி: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வருடம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகளையும் காதலிக்கும் படியாக கதை அமைந்திருக்கும். அத்துடன் “டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்டவிட்டு குடுக்க” பாடலில் இருவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டிருப்பார்.

Also read: தமிழ் புத்தாண்டை குறிவைத்து ரிலீஸ் ஆகும் 5 படங்கள்.. பிச்சைக்காரன் 2-வை டீலில் விட்ட விஜய் ஆண்டனி

கமல்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு பஞ்சதந்திரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், சிம்ரன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் சிம்ரனை திருமணம் செய்து கொண்டு ரம்யா கிருஷ்ணன் உடன் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்வார். பிறகு வரும் ஒரு சூழ்நிலையில் இவர்களுடன் சேர்ந்து கமல் “வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்” என்ற பாடலில் டான்ஸ் அடிப்பார்.

சிம்பு: 2006 ஆம் ஆண்டு சிம்பு இயக்கத்தில் வல்லவன் திரைப்படம் வெளிவந்தது.இதில் சிம்பு, ரீமாசென், நயன்தாரா, சந்தியா மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் சிம்பு வல்லவன் மற்றும் பள்ளனாக இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பை அழகாக வெளி காட்டி இருப்பார். அத்துடன் இவர் ரீமாசென் மற்றும் நயன்தாரா இருவரையும் காதலிப்பார். அதை வைத்து இவர்களுடன் சேர்ந்து “எம்மாடி ஆத்தாடி” பாடலுக்கு ஆடி இருப்பார். ஆனால் இந்த பாடல் செம ஹிட் ஆனது.

Also read: 5 வருடத்திற்கு பின் மீண்டும் மிரட்ட வரும் முட்ட கண்ணு வில்லன்.. நயன்தாராவை தலை தெரிக்க ஓடவிட்ட கொடூரன்

- Advertisement -

Trending News