ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நெகட்டிவ் ரோலில் தெறிக்கவிட்ட ரஜினியின் 5 படங்கள்.. புது அவதாரம் கொடுத்த மூன்று முடிச்சு

ரஜினி இப்பொழுது முன்னணி ஹீரோவாக இருந்திருந்தாலும் இவர் சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் வில்லத்தனமாக நடிப்பை தெறிக்க விட்டிருப்பார். ஆனால் அதிலும் பாராட்டைப் பெற்ற ஒரே நடிகர் இவர்தான். முக்கியமாக கமலும் இவரும் நடித்த படங்களில் அவருக்கு வில்லனாகவே அதிகமாக நடித்திருப்பார். அப்படி இவர் வில்லத்தனமாக நடித்து அதை பார்த்து ரசித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

காயத்ரி: ஆர்.பட்டாபிராமன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு காயத்ரி திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெய்சங்கர், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.இப்படத்தில் ரஜினிகாந்த், ராஜரத்தினம் என்ற கதாபாத்திரத்தில் பெண்களை தவறாக சித்தரித்து பதிவு செய்யும் நீலப்பட தயாரிப்பாளராக நடித்திருப்பார்.

Also read: ரஜினி, கமல் தலையெழுத்தை மாற்றிய அந்த 2 படங்கள்.. சம்பளத்தை தாண்டி லாபம் பார்த்த ரகசியம்

16 வயதினிலே: பாரதிராஜா இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், காந்திமதி மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த் பரட்டை என்ற கதாபாத்திரத்தில் ஒரு மோசமான ரவுடியாக நடித்திருப்பார்.

ஆடு புலி ஆட்டம்: எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு ஆடுபுலி ஆட்டம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், ரஜினிகாந்த், சங்கீதா மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் கமல் மாஸ் ஹீரோவாகவும், ரஜினி வில்லத்தனமாகவும் இருவரும் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் ரஜினி அடிக்கடி சொல்லும் வசனம் “இதுதான் ரஜினி ஸ்டைல்” என்று பலமுறை படம் முழுவதும் கூறி இருப்பார்.

Also read: ரஜினியால், மகன்களையும் ஒதுக்கும் தனுஷ்.. விவாகரத்திற்கு பின்னும் நிம்மதி இல்லாமல் தவிப்பு

நெற்றிக்கண்: 1981 ஆம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் நெற்றிக்கண் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், சரிதா, மேனகா மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த், அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இதில் அப்பாவாக இருக்கும் ரஜினிகாந்த் செய்த தவறை அவரது மகன் தண்டிக்கும் விதமாக கதை அமைந்திருக்கும்.

மூன்று முடிச்சு: கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு மூன்று முடிச்சு திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த் நடித்தார்கள். இப்படத்தில் கமலஹாசன்,ஸ்ரீதேவி இருவரும் காதலிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இவர்கள் காதலை பிரிக்கும் வில்லனாக ரஜினிகாந்த் நடித்திருப்பார்.

Also read: ரஜினிக்கு நடந்த பெரும் அவமானம்.. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு காரணமான அந்த வார்த்தை

- Advertisement -

Trending News