ரஜினிக்கு நடந்த பெரும் அவமானம்.. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு காரணமான அந்த வார்த்தை

அப்போது மட்டுமல்ல எப்போதுமே ஒரே சூப்பர் ஸ்டார் தான் என்று கொண்டாடப்பட்டு வரும் ரஜினி இப்போது புகழ் வெளிச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். கோடிகளில் சம்பளம், ஏகப்பட்ட சொத்து என்று வாழ்ந்து வந்தாலும் அவர் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறார்.

அந்த சோதனைகளை எல்லாம் கடந்து தான் அவர் இன்று சூப்பர் ஸ்டாராக மக்கள் முன் இருக்கிறார். ஆனால் இந்தப் பட்டம் அவருக்கு அவ்வளவு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. பல வலிகளையும், அவமானங்களையும் கடந்து தான் அவர் பேரும், புகழும் பெற்றிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு.. லிங்கா, யாத்திராவுடன் ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்

அந்த வகையில் ரஜினி நடிக்க வந்த ஆரம்ப கால கட்டத்தில் சந்தித்த ஒரு அவமானம் தான் அவரை மிகப் பெரிய ஹீரோ அந்தஸ்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதாவது சூப்பர் ஸ்டாருக்கு ஆரம்பத்திலேயே ஹீரோ அந்தஸ்து கிடைத்துவிடவில்லை. வில்லன், கேரக்டர் ஆர்டிஸ்ட் என்று படிப்படியாகத்தான் ஹீரோவாக உயர்ந்தார். பல வருடங்களுக்கு முன்பு ரஜினி தனக்கான அங்கீகாரத்திற்காக கஷ்டப்பட்டு வந்த காலகட்டம் அது.

அப்போது அவர் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது மதிய உணவுக்காக அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். அனைவருக்கும் சாப்பாட்டுடன் சேர்த்து முட்டை ஆம்லெட்டும் பரிமாறப்பட்டிருக்கிறது. உடனே ரஜினி எனக்கு இன்னொன்று கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அங்கு இருந்த ஒருவர் கோழி இன்னும் முட்டை போடவில்லை என்று நக்கலாக பதில் அளித்திருக்கிறார்.

Also read: தமிழ் சினிமாக்கு கிடைத்த தரமான 5 கேரக்டர் ஆர்டிஸ்ட்கள்..பக்ஸ் இல்லாமல் படம் வருவதில்லை

இதைக் கேட்ட ரஜினிக்கு பெருத்த அவமானம் ஆகி இருக்கிறது. இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் வேகமாக சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து இருக்கிறார். இந்த சம்பவம் அவர் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகு அவர் சினிமாவில் ஒரு உயரத்திற்கு சென்ற பிறகு மீண்டும் தன்னை அவமதித்த நபரை பார்த்திருக்கிறார். அப்போது அவரிடம் ரஜினி கோழி முட்டை போட்டு விட்டதா என்று கேட்டிருக்கிறார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த நபர் கண்கலங்கியபடி மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினி அவரிடம் நீங்கள் சொன்ன அந்த வார்த்தை தான் என்னை உயர வைத்தது. இல்லையென்றால் நான் வில்லன், குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து சாதாரண நடிகராக இருந்திருப்பேன் என்று பெருந்தன்மையுடன் கூறி இருக்கிறார். அந்த வகையில் ரஜினி இன்று புகழின் உச்சியில் இருப்பதற்கு அந்த ஒரு சம்பவமும் காரணமாக இருக்கிறது.

Also read: 80களில் ரஜினி, கமலையும் பயப்பட வைத்த 5 ஹீரோக்கள்.. பெண்களை விடுங்க ஆம்பளையும் சுற்ற வைத்த நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்