முதல் முறையாக கேன்சர் நோய் வைத்து வந்த திரைப்படம்.. அதுக்கப்புறம் வந்த படம்லாம் படுமோசம்

தமிழ் சினிமாவில் தற்போது மட்டுமல்லாமல் அந்த காலம் முதலே நல்ல கதை கரு கொண்ட படங்கள் எல்லாம் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமா இதர மொழி படங்களில் இருந்து தனித்துவமாக தெரிவதற்கு இந்த படங்கள்தான் அடித்தளமாக அமைந்தது. அப்படி ஒரு சிறந்த தமிழ் படம் தான் நெஞ்சில் ஓர் ஆலயம்.

கடந்த 1962ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் அளவிற்கு வெற்றி பெற்றது. முதல் முறையாக புற்றுநோயை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் படம் என்றால் அது இந்த படம் தான். இப்போது எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வந்திருக்கலாம், ஆனால் புற்றுநோய் விழிப்புணர்வுக்கு அடித்தளமிட்டது நெஞ்சில் ஓர் ஆலயம் படம் மட்டுமே.

முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா, வி.எஸ்.ராகவன், நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தில் அனைவரது நடிப்பும் பாராட்டை பெற்றது. ஒரு பரிசோதனை முயற்சியாக இப்படம் முழுவதும் மருத்துவமனை போன்ற அமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி முதல் முறையாக ஒரு முக்கோண காதல் கதையை மிகவும் அழகாக காட்சிப்படுத்தி இருந்த இயக்குனர் ஸ்ரீதருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் முக்கோண காதல் கதை இயக்குனர் என்ற பெயரையே வைத்து விட்டார்கள். அந்த அளவிற்கு நெஞ்சில் ஓர் ஆலயம் படம் இயக்குனருக்கு சிறந்த பெயரை பெற்று தந்தது.

nenjil-oru-alayam
nenjil-oru-alayam

இன்று எத்தனை படங்கள் வேண்டுமானாலும் புற்றுநோயை மையப்படுத்தி வெளியாகி இருக்கலாம். ஆனால் இதற்கான விதை நெஞ்சில் ஓர் ஆலயம் படம் மட்டுமே. எல்லா காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் சிறந்த படங்கள் வந்து கொண்டுதான் உள்ளன. நாம் தான் இதுபோன்ற நல்ல படங்களை கவனிக்க தவறி விடுகிறோம். இனியாவது இதுபோன்ற படங்களை கொண்டாடுவோம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்