மயில் சாமியை ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரித்த இயக்குனர்.. சொல்வதை கேட்டிருந்தால் இப்படி நடந்து இருக்காது

நடிகர் மயில்சாமி நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றவர். இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு மொத்த திரையுலகமும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருந்தது.

மயில்சாமி மறைந்து சில வாரங்களாகியும் அவரை பற்றிய பேச்சுக்கள் இன்று வரை ஓய்ந்தபாடில்லை . தினமும் ஒரு பிரபலம் அவரைப் பற்றிய தெரியாத நிறைய விஷயங்களை மக்களிடையே பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவரைப் பற்றிய நினைவுகளையும் சொல்லி வருகின்றனர்.

Also Read: சிவராத்திரி அன்று சிவனிடம் சென்ற மயில்சாமி.. கடைசி நிமிடங்களில் பேசிய நிறைவேறாத ஆசை

அந்த வகையில் தற்போது இயக்குனர் பி வாசு, நடிகர் மயில்சாமி பற்றி பேசி இருக்கிறார். அவர் பேசியபோது மயில்சாமி தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அடிக்கடி வீட்டிற்கு வந்து சந்தித்து விட்டுப் போவார் என்றும் சொல்லி இருக்கிறார். மேலும் அவர் எப்பொழுது ஃபோன் பண்ணினாலும் நான் எடுத்துப் பேசுவேன் என்றும் சொன்னார்.

கடைசியாக மயில்சாமி இயக்குனர் வாசு வீட்டிற்கு வந்து இருந்தபோது, வாசு, மயில்சாமியிடம் உடம்பை கவனமாக பார்த்துக் கொள், விளையாட்டுதனமாக இருக்காதே, எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அதற்கு மயில்சாமி அதெல்லாம் ஒன்றும் ஆகாது சார் என்று சிரித்தபடி பதில் சொன்னாராம்.

Also Read: 100 படங்களுக்கும் மேல் நடித்து மக்கள் மனதில் நிரந்தரமாக குடியேறிய மயில்சாமி.. காலமானார்!

அப்படி பேசிய மயில்சாமி தற்போது இல்லை என மிகுந்த வருத்தத்துடன் வாசு சொல்லி இருக்கிறார். இயக்குனர் பி வாசு மட்டும் இல்லை மயில்சாமியின் மறைவிற்குப் பின்னர் பேசிய பல பிரபலங்களும் சொல்லிய ஒரே வார்த்தை மயில்சாமியை ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்து என்று சொல்லியதைத்தான் சொன்னார்கள்.

மறைந்த நடிகர் மயில்சாமியை பொறுத்த வரைக்கும் சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்ட நிறைய பேருக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார். சினிமாவை தாண்டி அவர் ஏரியாவில் வசிக்கும் ஏழைகளுக்கு கூட தன்னால் முடிந்த உதவிகளை செய்து மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் போல் வாழ்ந்திருக்கிறார்.

Also Read: ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து உயிரை விட்ட மயில்சாமி.. கடைசியில் பார்க்க முடியாமல் போன பரிதாப நிலை.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்