தளபதி 66 படத்தில் விஜய் உடன் இணைந்த பிரபல நடிகர்.. இவங்க காம்போ வேற லெவல் ஆச்சே

விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் இணைந்த தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, சங்கீதா, பிரகாஷ்ராஜ், ஷ்யாம் என ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போது இப்படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரபுதேவாவும் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் போக்கிரி மற்றும் வில்லு படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார். இதன் மூலம் இருவரும் நட்பாக பழகி வந்தனர். மேலும் பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ரவுடி ரத்தோர் படத்தில் பிரபு தேவா கேட்டுக்கொண்டதால் விஜய் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

தளபதி 66 படத்தில் விஜய்யின் பாடலுக்கு கோரியோகிராபராக பிரபுதேவா பணியாற்ற உள்ளார். இப்படத்தில் ஒரு பாடல் ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்க உள்ளார். மேலும் இப்படத்தில் மற்றொரு பாடலுக்கு தான் பிரபுதேவா கோரியோகிராஃப் அமைக்கயுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இப்பாடலுக்கு பிரபுதேவா தான் கோரியோகிராஃப் செய்ய வேண்டும் என படக்குழுவிடம் விஜய் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் கேட்டுக்கொண்டதால் மறுக்காமல் உடனே பிரபுதேவாவும் இப்படத்திற்கு கோரியோகிராபி செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார்.

தளபதி 66 படத்தை பற்றி தினமும் ஒவ்வொரு அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வருகிறது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

- Advertisement -