Bayilvan Ranganathan: நடிகர் மற்றும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் வாயிலாக சினிமா பிரபலங்களை பற்றி பேசி வருகிறார். அதுவும் குறிப்பாக நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை இவர் பேசி வருவதால் பிரபலங்கள் இவரை கடுமையாக சாடி வருகிறார்கள். ஆனாலும் அசராத பயில்வான் தொடர்ந்து இந்த வேலையை செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் பேசிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை தொடரான எதிர்நீச்சல் என்ற தொடரில் குணசேகரனாக நடித்த மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பொதுவாக மாரடைப்பு என்பது எதிர்பாராத விதமாக நடக்கக்கூடிய ஒன்றுதான்.
Also Read : ஒரு வருஷத்திலேயே புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிய மூதேவி.. மகாலட்சுமியை மோசமாக வறுத்தெடுத்த பயில்வான்
ஆனால் மாரிமுத்துவின் மரணத்தில் நிறைய ரகசியங்கள் இருப்பதாக யூடியூபில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பயில்வான் பேசுகையில் மாரிமுத்து சில நாட்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஜோதிடர்களுக்கு எதிராக பேசி இருந்தார். கடவுள் நம்பிக்கை இல்லாத மாரிமுத்து அவர்களை ஒருமையில் பேசி இருந்தார்.
அதோடு மட்டுமல்லாமல் சீரியலில் வில்லனாக நடித்ததால் பல பெண்களின் வாயில் விழுந்தார். அவர்கள் விட்ட சாபம் மட்டும் இன்றி ஜோதிடரை பகைத்துக் கொண்டதால் தான் மாரிமுத்து உயிரிழந்து விட்டதாக பயில்வான் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ரேகா நாயர் சில விஷயங்களைப் பகிர்ந்து இருக்கிறார்.
Also Read : இந்த வார டிஆர்பி-யில் கலக்கிய டாப் 6 சீரியல்கள்? குணசேகரனை சமாளிக்க முடியாமல் திணறும் சேனல்கள்
ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் மற்றும் ரேகா நாயர் இடையே வாய்க்கால் தகராறு இருக்கிறது. ஏனென்றால் இரவில் நிழல் படத்தில் அவர் பாதி ஆடை இன்றி நடித்ததால் பயில்வான் அதை தவறாக பேசினார். இதனால் நடு ரோட்டிலேயே இவர்கள் இடையே பிரச்சனை வெடித்தது. இந்நிலையில் ரேகா நாயர் பயில்வானை பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும்.
ஆனால் ஒருவரின் இறப்பில் கூட பணம் சம்பாதிக்கும் மனுஷனாக இருப்பார் என்று நினைத்து பார்க்கவில்லை. மாரிமுத்துவின் இறப்பை பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு, இந்த ஆளு போற நாளை பட்டாசு வெடித்து கொண்டாட காத்து இருக்கிறேன் என ரேகா நாயர் பேசியிருக்கிறார். அந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது வைரலாக பரவி வருகிறது.
Also Read : 35 வருட சினிமா வாழ்க்கையில் மாரிமுத்து சொத்து மதிப்பு.. குணசேகரனுக்கு வாரி வழங்கிய சன் டிவி