ஒரு வருஷத்திலேயே புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிய மூதேவி.. மகாலட்சுமியை மோசமாக வறுத்தெடுத்த பயில்வான்

Bayilvan Ranganathan: சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான விஜே மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இது பல விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் இந்த ஜோடி இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது என்று அலப்பறை செய்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து சமீபத்தில் தான் இவர்கள் தங்கள் முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடினார்கள். ஆனால் அது நடந்து ஓரிரு நாட்களிலேயே ரவீந்தர் மோசடி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Also read: காதல் மனைவியாலே மாட்டிய ரவீந்தர்.. பொறிவைத்து பிடித்த சம்பவம்

ஏற்கனவே இவர் மீது பல சர்ச்சைகள் இருந்த நிலையில் தற்போது பாலாஜி என்பவரிடம் ரவீந்தர் செய்த தில்லுமுல்லு அம்பலமானது. அதன்படி திடக்கழிவிலிருந்து மின்சாரம் எடுத்து நல்ல லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தை கூறி 16 கோடி வரை இவர் ஆட்டையை போட்டு இருக்கிறார். இதைத்தான் தற்போது பயில்வான் விமர்சனம் செய்திருக்கிறார்.

அதாவது வீட்டுக்கு மகாலட்சுமி வந்தா நல்லது நடக்கும் என்று சொல்வார்கள். ஆனால் மூதேவி வீட்டுக்கு வந்து புருஷனை ஒரு வருஷத்திலேயே ஜெயிலுக்கு அனுப்பிடுச்சு என ரவீந்தர் வீட்டில் பேசி வருவதாக பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் மோசமாக பேசியிருக்கிறார்.

Also read: நாக்கு மேல பல்ல போட்டு பேசுன ஊரு.. திருமண நாளில் பதிலடி கொடுத்த ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடியின் புகைப்படம்

அது மட்டுமில்லாமல் யூடியூபில் பல பேரை கிழி கிழின்னு கிழித்து கொடிகட்டி பறந்த ரவீந்தர் இப்போது புழல் சிறையில் கம்பி எண்ணி வருகிறார் என்றும் நக்கலாக பேசியிருக்கிறார். ஏற்கனவே இந்த கைது விவகாரத்தில் மகாலட்சுமி வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு உச்சகட்ட மன உளைச்சலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல் பயில்வான் அவரை கீழ்தரமாக பேசியிருப்பது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. என்ன இருந்தாலும் கஷ்டத்தில் இருப்பவரை இப்படியா பேசுவது என மகாலட்சுமிக்கு ஆதரவாக கமெண்ட் வந்து கொண்டிருக்கிறது.

Also read: வாரிசு நடிகரை நம்பி ஏமாந்த பிரியா ஆனந்த்.. கழட்டி விட்டதால் பரபரப்பை கிளப்பிய பயில்வான்

- Advertisement -