ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இந்த வார டிஆர்பி-யில் கலக்கிய டாப் 6 சீரியல்கள்? குணசேகரனை சமாளிக்க முடியாமல் திணறும் சேனல்கள்

This Week TRP Ratings: இல்லத்தரசிகள் மட்டுமல்ல இப்போது வீட்டில் இருக்கும் இளசுகளும் அனுதினமும் சீரியலை தவறாமல் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தனியார் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு திரைப்படங்களுக்கு நிகரான கதைகளத்துடன் புது புது சீரியல்களை ஒளிபரப்பு செய்கின்றனர்.

அந்த சீரியல்களில் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். இந்நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. இதில் 10-வது இடத்தை சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் பிடித்துள்ளது.

Also Read: குணசேகரனை விட குடைச்சல் கொடுக்கும் கரிகாலன்.. இனி மாரிமுத்துவை பார்க்க முடியாத கடைசி எபிசோடு

தொடர்ச்சியாக 9-வது இடம் கூட்டு குடும்பம் இந்த காலத்திலும் சாத்தியம் என்பதை காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிடித்துள்ளது. 8-வது இடம் சிங்க பெண்ணாக ஒவ்வொரு நாளும் சீரியலில் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமிக்கு கிடைத்துள்ளது. 7-வது இடம் புத்தம் புது சீரியலான சிறகடிக்க ஆசை என்ற சீரியல் பெற்றுள்ளது.

இதில் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட மீனா- முத்து இருவரும் இப்போது கணவன் மனைவியாக வாழ துவங்கியிருக்கின்றனர். அதிலும் மீனா மாமியாருக்கு அவ்வப்போது கொடுக்கும் டோஸ் ரசிகர்களை மகிழ்விக்கிறது. 6-வது இடம் சன் டிவியின் Mr.மனைவி சீரியல் பெற்றுள்ளது.

5-வது இடம் ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கும் இனியா-வுக்கு கிடைத்துள்ளது. 4-வது இடம் வானத்தைப்போல சீரியல் பெற்றுள்ளது. 3-வது இடம் கலெக்டராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சுந்தரிக்கு கிடைத்துள்ளது. 2-வது இடம் கயல் சீரியல் பெற்றிருக்கிறது.

Also Read: பட்டும் திருந்தாமல் சொகுசு வாழ்க்கைக்கு அலையும் தம்பி பொண்டாட்டி.. விடிய விடிய விளக்கு பிடிக்கும் மூர்த்தி

சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணாக இருக்கும் கயல் தன்னை சுற்றி இருக்கும் பிரச்சனையை துணிச்சலுடன் ஒவ்வொரு நாளும் சமாளித்து, மற்ற பெண்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருப்பதால் இந்த சீரியல் முதல் அல்லது இரண்டாவது இடத்தை தான் எப்போதுமே ஆக்கிரமிக்கும். இந்த முறை எதிர்நீச்சல் சீரியலால் கயல் பின்னுக்கு தள்ளப்பட்டு இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

முதல் இடம் எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து திடீரென்று ஹார்ட் அட்டாக்கில் இறந்ததால்அவரின் குரல் மற்றும் அவரது கடைசியான நடிப்பை கண்களில் கண்ணீருடன் சின்னத்திரை ரசிகர்கள் இந்த வாரம் முழுவதும் பார்த்தனர். இனி அடுத்த வாரம் ஆதிகுணசேகரன் ஆக வேறு ஒரு நடிகர்தான் நடிக்கப் போகிறார் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Also Read: குணசேகரன் இடத்தை நிரப்ப அலோல்லப்படும் சன் டிவி.. பல லட்சங்கள் கொட்டியும் இழுப்பறியில் 5 நடிகர்கள்

- Advertisement -

Trending News