குணசேகரன் முகத்தில் கரியை பூசிய குட்டி நந்தினி.. தூபம் போட வந்த தாய் கிழவி, எதிர்நீச்சல் இன்றைய எபிசோட்

Ethirneechal: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. ஆனால் இனிமேல் உங்க பாட்சா பலிக்காது என்ற கதையாக இளைய தலைமுறைகள் இப்போது ஒன்று சேர்ந்து அவருக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கின்றனர்.

அதிலும் குட்டி நந்தினி தாராவின் நடிப்பு வேற லெவலில் இருக்கிறது. நேற்றைய எபிசோடில் மஞ்சள் கயிறை தன் அப்பாவிடம் கொடுத்து அம்மா கழுத்தில் கட்டுங்க என்று சொன்ன விதமும் அந்த காட்சியும் சீரியலின் ஹைலைட்டாக இருந்தது.

எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் பிள்ளைகளின் ஆதரவு பெற்றவர்களுக்கு யானை பலம் தரும் என்பதை இயக்குனர் இந்த ஒரு விஷயத்தின் மூலம் அழகாக காட்டியிருந்தார். அதேபோல் தன்மானம் முக்கியம் என அம்மாவின் நகைகளை கழட்டி குணசேகரனிடம் தாரா கொடுப்பதும் பாராட்டும் விதமாக இருந்தது.

Also read: அமிர்தாவை மீண்டும் திருமணம் செய்ய போகும் கணேஷ்.. எதிர்பாராத ட்விஸ்டுடன் பாக்கியலட்சுமி

அதைத்தொடர்ந்து கதிர் நிச்சயம் ஜெயித்து காட்டுவோம் என தன் அண்ணனிடம் சவால் விட்ட தருணமும் அவரை ஹீரோவாக காட்டியது. இப்படி நேற்றைய எபிசோட் சபாஷ் என்று சொல்லும் வகையில் இருந்தது. அதை தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் ஜனனியின் அப்பத்தா குணசேகரனுக்கு தூபம் போடுவது போல் பேசி கடுப்பேற்றுகிறார்.

இருக்கிற பிரச்சினை போதாதுன்னு இவரின் என்ட்ரி வேறு ஜனனியை கொந்தளிக்க வைத்துள்ளது. இப்படி தர்ஷனியின் பிரச்சனை, குணசேகரனின் ஆட்டம், தாய் கிழவியின் வில்லத்தனம் என எதிர்நீச்சல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் விரைவில் தர்ஷினியின் பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் ஆடியன்ஸின் ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Also read: பொண்டாட்டி, பிள்ளைக்காக சைக்கோவாக மாறிய கணேஷ்.. பைத்தியக்காரத்தனமாக உருட்டும் பாக்கியலட்சுமி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்