வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அமிர்தாவை மீண்டும் திருமணம் செய்ய போகும் கணேஷ்.. எதிர்பாராத ட்விஸ்டுடன் பாக்கியலட்சுமி

Baakiyalakshmi Serial : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் எதிர்பார்க்காத ட்விஸ்டுடன் காட்சிகள் அரங்கேறி இருக்கிறது. அதாவது அமிர்தா மற்றும் நிலா இருவரையும் கணேஷ் கடத்தி சென்றுள்ளார். மேலும் பாக்யா தான் அமிர்தாவை அழைத்து சென்றதால் அவருக்கு வீட்டில் திட்டு விழுகிறது.

இதை தொடர்ந்து செழியன் மற்றும் எழில் இருவரும் பழனிச்சாமியின் உதவியை நாடுகிறார்கள். அவரும் எப்படியும் அவர்களை கண்டுபிடித்து விடலாம் என்று தேற்றுகிறார். இந்நிலையில் பாக்யா நீண்ட யோசனைக்கு பிறகு காரின் நம்பரை ஞாபகப்படுத்தி கண்டுபிடித்து விடுகிறார்.

உடனடியாக எழிலுக்கு போன் செய்து கார் நம்பரை கூறுகிறார். மற்றொருபுறம் அமிர்தாவுக்கு எழில் கட்டிய தாலியை கணேஷ் அறுக்க நினைக்கிறார். அமிர்தா ஆர்ப்பாட்டம் செய்து அதை தடுத்து விட்டார். இந்நிலையில் ஒரு ஐயரை வைத்து புது மாப்பிள்ளை போல் கணேஷ் ரெடியாகி இருக்கிறார்.

Also Read : சிவகார்த்திகேயன் கூட பிறந்த நாள் கொண்டாடும் 6 நட்சத்திரங்கள்.. எல்லாமே விஜய் டிவி கண்டுபிடிப்பா இருக்கே!

மேலும் அமிர்தாவுக்கு பட்டுப் புடவை வாங்கி கட்ட சொல்லிக் கொடுக்கிறார். இதை கட்டவில்லை என்றால் எழிலை சேர்த்துக் கொன்று விடுவேன் என்று கணேஷ் மிரட்டுகிறார். அதோடு மட்டுமல்லாமல் வலுகட்டாயமாக தாலியை எடுத்து வந்து அமிர்தாவின் கழுத்தில் கட்ட இருக்கிறார்.

ஆனால் அதற்குள்ளாகவே எழில் கண்டிப்பாக அந்த அமிர்தாவை காப்பாற்றி விடுவார். மேலும் இப்போதே வெறிபிடித்து இருப்பது போல் இருக்கும் கணேஷ் அடுத்தது என்ன செய்வார் என்று எதிர்பார்க்க முடியாத காட்சிகளும் வர இருக்கிறது. எனவே பாக்கியலட்சுமி தொடர் இப்போது சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.

Also Read : சிங்கப்பெண்ணே: கையும் களவுமாக சிக்கிய மித்ரா.. திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆன நிலைமை

- Advertisement -

Trending News