புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பொண்டாட்டி, பிள்ளைக்காக சைக்கோவாக மாறிய கணேஷ்.. பைத்தியக்காரத்தனமாக உருட்டும் பாக்கியலட்சுமி

Baakiyalakshmi : விஜய் டிவியில் ஆரம்பத்தில் மிகவும் சுவாரசியமாக ஓடிக்கொண்டிருந்த பாக்கியலட்சுமி தொடர் இப்போது ரசிகர்களுக்கே அலுப்பு ஏற்படுத்தும் படியாக உள்ளது. பொண்டாட்டி, புள்ளை தனக்கு வேண்டும் என்று சைக்கோவாக மாறிய கணேஷ் அவர்களை கடத்தி சென்று ஒரு குடோனில் அடைத்து வைத்திருக்கிறார்.

மேலும் பாக்யா மற்றும் எழில் என இருவரும் அமிர்தாவை தேடி அழைகின்றனர். இந்நிலையில் எழில் கட்டிய தாலியை கழட்டி விட்டு அமிர்தாவுக்கு தாலிக்கட்ட வேண்டும் என புது மாப்பிள்ளை போல் தயாராக இருக்கிறார் கணேஷ். மேலும் அமிர்தா கழுத்தில் உள்ள தாலியை கழட்ட முயற்சி செய்கிறார்.

சரியான நேரத்தில் எழில் என்ட்ரி கொடுத்து கணேஷை மிரட்டுகிறார். இருவருக்கும் அடிதடி சண்டை நடக்கிறது. மேலும் அப்போது பழனிச்சாமி போலீஸ் உடன் நுழைந்ததால் கணேஷை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். அதோடு பாக்யா பழனிச்சாமிக்கு நன்றி சொல்கிறார்.

Also Read : சிவகார்த்திகேயன் கூட பிறந்த நாள் கொண்டாடும் 6 நட்சத்திரங்கள்.. எல்லாமே விஜய் டிவி கண்டுபிடிப்பா இருக்கே!

அதாவது பழனிச்சாமியால் தான் அமிர்தா இருக்கும் இடம் தெரிய வந்தது. மேலும் இதனால் கணேஷ் இடம் இருந்து சரியான நேரத்தில் அமிர்தாவை காப்பாற்ற முடிந்தது. அதோடு கணேஷ் என் பொண்டாட்டி, பிள்ளையை என்கிட்ட குடுங்க என சைக்கோ போல் மாறி கதறி கொண்டு இருக்கிறார்.

கோபி வீட்டில் எல்லோரும் அமிர்தாவுக்கு என்ன நடந்ததோ என்ற பயத்தில் இருக்கிறார்கள். அப்போது பழனிச்சாமியின் உதவியால் அமிர்தா காப்பாற்றப்பட்டார் என கோபியின் தந்தை கூறுகிறார். இதைக் கேட்டவுடன் பழனிச்சாமி இந்த விஷயத்திற்கு எப்படி நுழைந்தார் என கோபி தலையைப் பியித்துக் கொள்கிறார்.

Also Read : 3 வாரங்களாக டிஆர்பியை விட்டுக் கொடுக்காத மூன்று சீரியல்கள்.. இது என்னடா விஜய் டிவிக்கு வந்த சோதனை

- Advertisement -

Trending News