விஜய்யின் அரசியல் கொள்கை என்ன தெரியுமா.? தீயாய் வேலை செய்யும் மக்கள் மன்றம், ஒரு கை பாத்துரலாம்

Vijay: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது ஆடியோ லான்ச் வேலைகள் அனைத்தும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இப்படம் திரையரங்குகளில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வர இருக்கிறது. இப்படத்தை பார்த்து கொண்டாடுவதற்கு அனைத்து ரசிகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தை கமிட் செய்திருக்கிறார். மேலும் இதற்கான வேலைகளும் தடபுடலாக ஆரம்பமாக இருக்கிறது. இப்படி தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு தற்போது வசூல் மன்னனாகவும், ஆட்ட நாயகனாகவும் வந்து கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் இவருடைய நீண்ட நாள் ஆசையான அரசியலிலும் கால் பதித்து விட்டார்.

Also read: வில்லனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த வாக்குறுதி.. 17 வருடங்களுக்குப் பின் ஜெயிலரால் கிடைத்த அங்கீகாரம்

அதற்கேற்ற மாதிரி பல நல்ல திட்டங்களை தொடங்கி மாணவர்களுக்கு பரிசு அளித்து கௌரவத்தை கொடுத்தார். அத்துடன் பசியில்லா உணவு திட்டம், இரவு பாடசாலை போன்ற பல நல்ல விஷயங்களை செய்து வந்தார். முக்கியமாக விஜய்யை விட இவருடைய மக்கள் இயக்கத்தினர் சங்கம் தான் பரபரப்பாக அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து வந்தார்கள்.

அதன் வழியாக தற்போது விஜய்யும் முழு கவனத்தை அரசியலில் செலுத்தி வருகிறார். சினிமாவில் ஜெயித்த மாதிரி அரசியலிலும் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீயாய் வேலை செய்து வருகிறார். எப்படியாவது அடுத்த சட்டப் பேரவை தேர்தலுக்குள் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து விட வேண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

Also read: விஜய்க்கு அக்கட தேசத்திலிருந்து வந்த கோரிக்கை.. ரஜினியை குறித்து, நஷ்ட ஈடு கேட்ட அவலம்

அதற்காக சினிமாவில் மூன்று வருட காலங்கள் இடைவெளியை எடுத்து அரசியல் சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்தையும் பார்ப்பதற்கு ஒவ்வொன்றாக விதைத்து கொண்டு வருகிறார். எப்படியாவது அரசியலில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக சமூக அக்கறையில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவருடைய அரசியல் கொள்கை என்னவென்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் சமூகத்தில் ஏற்படும் அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் விதமாகவும், எவ்வித பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்கிற உரிமையும், தீண்டாமைக்கு எதிராகவும் இருக்கக்கூடிய விஷயங்களை அறவே புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய வாக்குறுதியாக இருக்கப் போகிறது. இதை இவர் தனித்து இருந்து செயல்படுத்தி வெற்றி பெறுவாரா அல்லது கூட்டணியுடன் சேர்ந்து ஜெயிக்க போறாரா என்பது பலருக்கும் கேள்வியை எழுப்பி வருகிறது.

Also read: தாறுமாறாக உருவாகும் தளபதி 68 கதை.. விஜய்யின் அரசியலுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் வெங்கட் பிரபு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்