இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. கூட்டணியை வித்தியாசமாக உறுதி செய்த பிரதீப்-விக்கி

Vignesh Sivan-Pradeep Ranganathan: எப்படித்தான் இந்த மாதிரி அலப்பறை பண்றாங்கன்னு தெரியல, ஒருவேளை இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ. அப்படித்தான் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவனுடன் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோவை பார்த்தால் நினைக்க தோன்றுகிறது.

கடந்த வருடம் ஆளுக்கு ஒரு ஹிட் படத்தை கொடுத்ததோடு சரி. அதன் பிறகு ரெண்டு பேரும் இப்போது வரை என்ன செய்றாங்கன்னு தெரியாம இருந்துச்சு. ஆனா இப்ப இவங்க அடுத்த படத்துல இணைய போற செய்தி வித்தியாசமான ஒரு வீடியோவா வெளியாகி இருக்கிறது.

Also read: புலியை விட்டுவிட்டு பூனையை பிடித்து தொங்கும் இயக்குனர்.. இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கும் பிரதீப்

அதிலும் நேற்று விக்கியின் பிறந்த நாள் என்பதால் பிரதீப், நயன்தாரா கூட இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்க மாட்டார் என்ற ரேஞ்சில் ஒரு பரிசை கொடுத்திருக்கிறார். அதாவது பல நாட்களாக பலரும் எதிர்பார்த்து வந்த டேட்ஸை தான் அவர் பிறந்த நாள் கிப்ட்டாக கொடுத்திருக்கிறார்.

இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா என்று உங்களுக்கு தோணலாம். ஆனால் அவர் கொடுத்தது நீங்கள் நினைப்பது போன்று கால்ஷூட் கிடையாது பேரிச்சம்பழம். இதன் மூலம் எங்கள் கூட்டணி உறுதியாகிவிட்டது என்று அவர்கள் இருவரும் சூசகமாக சொல்லி இருக்கின்றனர்.

Also read: ஒருவேளை விடாமுயற்சி அவர் விட்ட சாபமா இருக்குமோ!. அடுத்த கூட்டணியுடன் சூட்டிங்க்கு தயாரான விக்கி

ஆனாலும் இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே, என்ன ஒரு புத்திசாலித்தனம் அப்படின்னு ரசிகர்கள் இந்த அறிவிப்பை பார்த்து ஜாலியாக கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அதிலும் இந்த பரிசை பார்த்த விக்கி, நல்லவேளை என்ன காப்பாத்திட்டீங்க என்று கலகலப்பாக சொல்வது ரசிக்கும் வகையில் இருக்கிறது.

இந்த வீடியோ தான் இப்போது சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது. மேலும் இதுவரை நயன்தாராவுக்கு பாடிகார்ட் போல சுற்றிக் கொண்டிருந்த விக்கி இனிமேலாவது தன்னோட வேலையை பார்ப்பாருப்பா என ரசிகர்கள் கிண்டலுடன் கூறி பிறந்த நாள் வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்துள்ளனர்.

கூட்டணியை உறுதி செய்த பிரதீப்-விக்கி

vignesh-sivan-pradeep-ranganathan
vignesh-sivan-pradeep-ranganathan
- Advertisement -