ஆந்திரா பக்கம் முழுசா சாய்ந்த சங்கர்.. ரிலீசுக்கு பிளான் பண்ணி தயாரிப்பாளரை அலறவிட்ட இயக்குனர்!

Director Shankar planning the Game Changer movie release: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த சங்கர் அவர்கள் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படப்பிடிப்பை முடித்துள்ளார் .

பாராளுமன்ற தேர்தலை அடுத்து கூடிய விரைவில் வெள்ளித்திரையில் ரிலீஸ் ஆக உள்ளது இந்தியன் 2.

இதன் படப்பிடிப்பின் போது பல சிக்கல்களை சந்தித்த படக்குழு தொடர்ச்சியாக இயக்க முடியாமல் இதனை சிறிது காலம் கிடப்பில் போட்டது தயாரிப்பு நிறுவனம் லைகா.

இந்த நேரத்தில் தான் சங்கர் தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில்ராஜுடன் கைகோர்த்து ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

வித்யாசமான கதை அம்சத்துடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது ராம் சரணின் கேம் சேஞ்சர். ராம் சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் டிஜிட்டல் உரிமை அதிக விலைக்கு விற்றதால் மகிழ்ந்த தயாரிப்பாளர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை படம் நல்லபடியாக வர வேண்டும் என்று இயக்குனர் சங்கரிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்த இயக்குனரோ  குறைவான நாட்கள் மட்டுமே இருக்கும் படப்பிடிப்பை நீட்டித்து தாறுமாறாக செலவு செய்ய ஆரம்பித்தார்.

படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு 15 கோடி, கிளைமாக்ஸ் இல் ஆயிரம் ஸ்டண்ட் கலைஞர்களுடன் 75 கோடியில் ஆக்சன் காட்சி என இஷ்டத்துக்கு செலவு செய்ய அரண்டு போனார் தயாரிப்பாளர் தில்ராஜ்.

இன்னும் ராம் சரணின் கால்சீட் 20 நாட்கள் உள்ள நிலையில் படத்தை விறுவிறுவென முடிக்க சொல்லி ரிலீசுக்கு தயாராக ஆரம்பித்தார் தயாரிப்பாளர்.

மகர சங்கராந்தி ஸ்பெஷல் ஆக வெளியாகும் ராம் சரணின் கேம் சேஞ்சர்

ஆந்திராவில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாட மாட்டார்கள் என்பதால் வரும் சங்கராந்தி ஸ்பெஷலாக ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளது படக்குழு.

ரிலீசுக்கு அதிக நாட்கள் இருப்பதால் இன்னும் என்னதான் செய்ய காத்திருக்கிறாரோ இயக்குனர், என்று அரண்டு மிரண்டு போய் உள்ளார் தயாரிப்பாளர். 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்