Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

5 வருடம் கிடப்பில் போட்ட படம் .. காஷ்மீரில் இருந்து கௌதம் மேனன் வெளியிட்ட தரமான ரிலீஸ் அப்டேட்

ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் கௌதம் மேனன் அங்கிருந்து கொண்டே அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார். இந்த படத்தில் கௌதம் மேனன் நெகட்டிவ் ரோல் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மொத்த பட குழுவும் ஜம்மு காஷ்மீரில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். நேற்று இயக்குனர் மிஸ்கின் தன்னுடைய போர்ஷனை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். கௌதம் மேனன் ஜம்மு காஷ்மீரில் தான் இருக்கிறார்.

Also Read: தூசி தட்டி ரிலீசுக்கு ரெடி செய்யப்படும் விக்ரமின் படம்.. லேட்டா வந்தாலும் ஒடிடியில் நல்ல விலைக்கு போன வியாபாரம்

தற்போது ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் கௌதம் மேனன் அங்கிருந்து கொண்டே 5 வருடமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தன்னுடைய படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டு, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்-சீயான் விக்ரம் கூட்டணியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, பிரித்விராஜ் சுகுமாரன், பார்த்திபன், சிம்ரன், ராதிகா, திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்திருந்தனர். துருவ நட்சத்திரம் திரைப்படம் மொத்தம் ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டது.

Also Read: மீண்டும் தூசு தட்டப்படும் கௌதம் மேனனின் படம்.. வசமாய் சிக்கி கொண்ட விக்ரம்

கௌதம் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாளா, செந்தில் வீராசாமி, பி மதன் என மொத்தம் ஐந்து தயாரிப்பாளர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படம் பண பிரச்னை, கதை தாமாதம், கொரோனா ஊரடங்கு என அப்படியே கிடப்பில் போடப்பட்டது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் படத்தின் பேக் ரவுண்டு ஸ்கோர் வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாக அறிவித்தார்,

இந்நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் மே 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்திருக்கிறார். நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். வரும் ஏப்ரலில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் மே மாதத்தில் ரிலீஸ் ஆக போவது உறுதியாகி இருக்கிறது.

Also Read: கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன பட வாய்ப்பு.. மரண ஹிட் கொடுத்த பின் வாய்ப்பிற்காக கெஞ்சும் சியான்

Continue Reading
To Top