கௌதம் மேனனின் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. சிம்புக்கு வாழ்க்கை கொடுத்த ஒரே படம்

கோலிவுட்டில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். அந்த அளவிற்கு அவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. முதலில் விளம்பர படங்களை இயக்கிக் கொண்டிருந்த கௌதம் மேனன், அதன் பிறகு இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். பின் அவர் இயக்கிய அத்தனை காதல் படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், இளசுகளின் மனதை சுண்டி இழுத்த படங்களாகவும் இருந்தது. பெரும்பாலும் இவருடைய படங்களில் கனவு காதலியை அவ்வளவு தத்துவமாக காட்டிருப்பார். இதனால் இவரை கனவு காதலியின் கதாநாயகன் என்றும் ரசிகர்கள் புகழ்வதுண்டு.

மின்னலே: 201 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் மாதவன், அப்பாஸ், ரீமாசென், விவேக், நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காதல் திரைப்படம் தான் மின்னலே. இந்த படத்தில் காதலியை கரம் பிடிக்கும் வேண்டும் என்று, காதலன் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் மாப்பிள்ளை என்று பொய்யை கூறி, அவர் வீட்டிற்குள் நுழையவும் செய்கிறார். அதன் பின் உண்மையை தெரிந்துகொள்ளும் காதலி அவரை ஏற்பாரா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் முடிவு. காதல் என்பது எந்த எல்லைக்கு வேணாலும் ஒருவரை அழைத்துச் செல்லும் என்பதை கௌதம் மேனன் இதில் காண்பித்திருப்பார்.

காக்க காக்க: கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாக தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டினாலும், மறுபுறம் அவரிடம் இருக்கும் அழகான காதலை கௌதம் மேனன் வெளிக்காட்டி இருப்பார்.

Also Read: போதைக்கு அடிமையாகி மார்க்கெட்டை இழந்த சூர்யா பட வில்லன்.. புட்டு புட்டு வைத்த பயில்வான்

வேட்டையாடு விளையாடு: 2006 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் அதிரடி கலந்த காதல் படமாக வெளியான திரைப்படம் தான் வேட்டையாடு விளையாடு, இதில் டிசிபி ராகவனாக கமலஹாசனும், ஆராதனா கேரக்டரில் ஜோதிகாவும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இதில் கமலஹாசனுக்கும் அவருடைய முதல் மனைவிக்கும் இருந்த ரொமான்ஸ் பலரையும் பொறாமைப்படுத்தும் வகையில் இருந்தது. அதேபோல் இரண்டாவது மனைவியாக வரும் ஜோதிகாவுடனும் கமல் தன்னுடைய காதலி வெளிப்படுத்தும் விதம் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். இதெல்லாம் கௌதம் மேனனால் மட்டும்தான் முடியும் என்று ரசிகர்கள் இந்த படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்தனர்.

வாரணம் ஆயிரம்: 2008 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த படம் வாரணம் ஆயிரம். இதில் சூர்யாவுடன் சமீரா ரெட்டி, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ஒரு தந்தை மகனுக்கு இடையே சுவையான நிகழ்வுகளை கோர்வையாக கௌதம் மேனன் கொடுத்திருப்பார். அதுமட்டுமல்ல முதல் காதல் தோல்வியடைந்த பிறகு இரண்டாவது காதல் எப்படி ஏற்படுகிறது? காதல் தோல்வியிலிருந்து எப்படி மீள்வது? என்பதையெல்லாம் இந்த படத்தில் கௌதம் மேனன் அழகாக காண்பித்து இருப்பார்.

Also Read: அக்கட தேசத்திலும் ஹிட்டடித்த சூர்யாவின் நான்கு படங்கள்.. தரமாக உருவாகி வரும் 5வது படம்

விண்ணைத்தாண்டி வருவாயா: 2019 ஆம் ஆண்டு சிம்பு, திரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி சூப்பர் ஹிட் அடித்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா, இதில் எதிர் வீட்டு பெண்ணை காதலிக்கும் சிம்பு, குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் இருவரின் மனநிலையை விவரிக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக இந்த படம் அமைந்திருக்கும். இந்தப் படம் சிம்புவின் சினிமா கேரியருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் அவருக்கு வாழ்க்கை கொடுத்த படமாகவும் அமைந்தது. அந்த அளவிற்கு இதில் காதலை அருமையாக காண்பித்து பார்ப்போரை சிலிர்க்க வைத்திருப்பார் கௌதம் மேனன்.

இவ்வாறு இந்த 5 படங்கள் தான் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படங்களில் மறக்க முடியாத படங்களாகும். அதிலும் விண்ணைத்தாண்டி வருவாயா படம் தான் சிம்பு-வுக்கு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது.

Also Read: புகழின் உச்சிக்கு ஏற்றி விட்ட இயக்குனர்களுக்கு டாட்டா காட்டிய சூர்யா.. ட்ராப் ஆன 3 படங்கள்