அட்லீயை விஜய் கூப்பிட்டதால் அப்செட் ஆன தனுஷ்.. இடையில் புகுந்து ஆட்டையை கலைத்த சன் பிக்சர்ஸ்

Dhanush was confused by the director’s search for Vijay 69: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியல் வருகை அறிவித்து விட்டதால் அவரது படங்கள்  சினிமா ஆர்வலர்களை தாண்டி பலராலும் உற்று நோக்கப்படுகிறது.

வெங்கட் பிரபுவுடன் GOAT படத்தில் இணைந்துள்ள விஜய் பகுதி வாரியாக அரசியலிலும் தன் பங்களிப்பை செலுத்தி வருகிறார். கடைசியாக விஜய் 69 என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போகின்றார் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

இதனைத் தொடர்ந்து விஜய் 69 காண இயக்குனர் தேடலில் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, H வினோத் என பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.

இன்று வரை விஜய் 69 படத்திற்கான இயக்குனரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் விஜய் மற்றும் அட்லீயின் சந்திப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

தளபதிக்கு தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர் அட்லீ, கடைசியாக விஜய் 69 படத்தையும் அவர்தான் இயக்குவார் என்று முடிவு கட்டினர் அவரது விஜய்யின் ரசிகர்கள்.

அட்லீயும் சன் பிக்சர்ஸ் உடன் படம் இயக்கப் போவதாக கூறிய அறிவிப்பை தொடர்ந்து மேற்கண்ட செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் அட்லீ தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் புதிய ப்ராஜெக்ட்டில் இணைந்து உள்ளார்.

விஜய் 69 காக சன் பிக்சர்ஸ்  உடன் இணையும் H வினோத் 

இதனால் விஜய், சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து கடந்த ஆண்டு அஜித்தின் துணிவு படத்தை இயக்கிய H வினோத்தை தனது கடைசி படத்திற்கான இயக்குனராக தேர்ந்தெடுத்ததாக செய்திகள் பரவி வருகிறது.

ஏற்கனவே வினோத் உலக நாயகன் கமலஹாசனை நம்பி ஒரு வருடமாக கதை விவாதத்தில் இருந்து, அது முடியாது போகவே இறுதியாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் தனுசுடன் இணைய இருந்தார். 

தற்போது அட்லீயின் வருகையால் விஜய் 69 உறுதியாகாததை அடுத்து சன் பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்துடன் பேசி சமாதானப்படுத்தி H வினோத்தை விஜய் 69 இயக்க இழுத்துக் கொண்டது.

இதனால் H வினோத்தை நம்பி தனது படத்தை பாதியில் விட்டு வந்த தனுஷ், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக கடும் அப்செட்டில் இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்