நான் சூப்பர் ஸ்டார் ரசிகன்னு தியேட்டருக்கு ஓடிய 5 நடிகர்கள்.. மாமா படத்திற்கு முதல் ஆளாக ஓடிய தனுஷ்

Actor Rajinikanth: சினிமாவைப் பொறுத்தவரை அசைக்க முடியாத இடத்திலும் பல கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்று முதல் இடத்தில் என்றைக்கும் இவர்தான் சூப்பர் ஸ்டார் என சொல்லும் படியாக கொடிகட்டி பறக்கிறவர்தான் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட இவரை பலதரப்பட்ட ரசிகர்கள் கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து சினிமா பிரபலங்களும் சூப்பர் ஸ்டார் தான் என்னுடைய தலைவர் அவருடைய தீவிர ரசிகன் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில் இவருடைய எந்த படமாக இருந்தாலும் முதல் ஆளாக தியேட்டரில் சென்று படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று வெறித்தனமாக இருக்கும் ரசிகர்கள் மத்தியில் சில நடிகர்களும் இருக்கிறார்கள்.

Also read: சொந்த குரலில் லதா ரஜினிகாந்த் பாடிய 5 பாடல்கள்.. நட்புக்காக செய்த விஷயம்

அந்த வகையில் நான் எப்போதுமே முதலில் அவருடைய ரசிகன் அதன் பிறகு தான் மாமா மருமகன் என்ற உறவு எல்லாம் என சொல்லிக் கொண்டிருக்கும் தனுஷ் முதல் ஆளாக இவருடைய படத்தை பார்த்த பிறகு தான் இவருக்கு மற்ற வேலைகள். அந்த அளவிற்கு வெறித்தனமான ரசிகர். இவரை தொடர்ந்து குரு மற்றும் சிஷ்யன் என்ற உறவில் ரஜினிக்கும் ராகவாவுக்கும் இருக்கும் உறவு அனைவருக்கும் தெரிந்தது.

ரஜினியை பார்த்து தான் நான் தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய குரு, தலைவர், ரோல் மாடல் எல்லாம் அவர் ஒருவரே என்று சொல்லி அவர் படத்தை முதல் நாளே திரையரங்குகளில் பார்த்து விட்டு வருவார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் இவருடைய நடிப்பை ஆரம்பத்தில் பார்ப்பதற்கு கொஞ்சம் ரஜினி சாயலில் இருக்கு என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

Also read: பணத் திமிரில் கணவர்களை விவாகரத்து செய்த 6 பிரபலங்கள்.. காதல் கணவரை தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அதற்கு காரணம் ரஜினியுடைய அனைத்து படங்களையும் பார்த்து வளர்ந்தவர் தான் நான் என்று பலமுறை சிவகார்த்திகேயன் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இவருக்கு எந்த வேலை எப்படி இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ரஜினியோட படத்தை முதல் நாளே வந்து பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான். அடுத்தபடியாக இவர்களைத் தொடர்ந்து வெறித்தனமான ரசிகன் என்று ரஜினிக்கு பாட்டு கொடுக்கும் வகையிலே அனைவருக்கும் புரிந்து இருக்கும்.

அவர்தான் ரஜினியின் தீவிரமான ரசிகர் அனிருத். ரசிகர்களுடன் ரசிகர்களாக இருந்து சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்து வருவார். அடுத்து நடிகர் ஜீவா, தலைவர் படம் வருகிறது என்றாலே இரவெல்லாம் தூக்கமே இல்லாமல் எப்பொழுது விடியும் என்று தவித்துக் கொண்டு முதல் காட்சியிலேயே படத்தை பார்த்து ரசித்து வரக்கூடியவர். இப்படி ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களையும் இழுக்கக்கூடிய காந்தம் தான் சூப்பர் ஸ்டார்.

Also read: ஒரே நாளில் 3 படங்களில் நடித்து ரஜினி வாங்கிய முதல் சொத்து.. குட்டிச்சுவரில் பாட்டிலும், கையுமாய் நின்ற ரஜினிகாந்த்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை