வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பணத் திமிரில் கணவர்களை விவாகரத்து செய்த 6 பிரபலங்கள்.. காதல் கணவரை தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Aishwarya Rajinikanth: சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கை என்பது எப்போதுமே நிரந்தரம் இல்லாத ஒன்று என்பதுதான் பொது மக்களின் கருத்தாக இருக்கிறது. இதற்கு காரணம் பல பிரபலங்கள் தங்களுடைய திருமண உறவை விவாகரத்தில் முடித்துக் கொள்வதுதான். ஒரு சில பிரபலங்கள் அதிகமாக பணம் இருப்பதால் சொந்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தங்கள் நினைத்தது போல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழவும் செய்கிறார்கள்.

அமலாபால்: நடிகை அமலாபால் பல எதிர்ப்புகளை தாண்டி இருவீட்டாரின் சம்மதத்தோடு இயக்குனர் ஏ.எல். விஜயை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின் இவர் நடித்த வேலை இல்லா பட்டதாரி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததை நம்பி, சினிமாவில் தனது பெரிய எதிர்காலம் இருப்பதாகவும், பணம் மட்டுமே இருந்தால் போதும் எனவும் நினைத்து கிடைத்த அழகான வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.

Also Read:புரட்டி எடுக்கும் இந்த கிருபா யார் தெரியுமா? பெரும் பதட்டத்தில் விக்ரமன் வெளியிட்ட பகிர் தகவல்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் இருவருக்குமே முதல் திருமணம் விவாகரத்தில் தான் முடிந்திருக்கிறது. இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் விருப்பப்பட்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷை கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து விவாகரத்து செய்திருக்கிறார். தற்போது ஒரு இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.

சுகன்யா: 90களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர்தான் நடிகை சுகன்யா. இவர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து அங்கேயே குடியேறினார். திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். மீண்டும் இந்தியா திரும்பிய சுகன்யா, சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார்.

Also Read:ஊருக்கு முன் உத்தமன் வேஷம் போட்ட பிக்பாஸ் விக்ரமன்.. போட்டோ ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய காதலி

டிடி: சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. கேரளாவை சேர்ந்த தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர், ஒரு வருடத்திற்குள் திருமண உறவை முறித்துக் கொண்டார். மீண்டும் சின்ன திரையில் ஒரு வலம் வரலாம் என்று நினைத்த இவருக்கு ஆர்த்தரடீஸ் நோய் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

மைனா: வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகை மைனா ஜிம் மாஸ்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு சில மாதங்களிலேயே அவரை பிரிந்து விட்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு, சின்னத்திரை நடிகரான யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மகாலட்சுமி: ஒரு தொகுப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில், அவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் சீரியலில் நடித்த ஈஸ்வர் உடன் காதலில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. பின்பு யாரும் எதிர்பார்க்காத நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

Also Read:கொடூர வில்லனாக இருந்து நகைச்சுவை நடிகர்களாக மாறிய 5 பிரபலங்கள்.. பாட்ஷாவுக்கு தண்ணி காட்டிய இந்திரனா இது.!

- Advertisement -

Trending News