அப்ப அது வதந்தி இல்லையா உண்மைதானா.. பல கோடி வியாபாரமான கேப்டன் மில்லருக்கு வந்த சோதனை

தனுஷ் ரொம்ப பிஸியாக கோலிவுட், பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படம் ஹிட் அடித்ததால் அவர் மார்க்கெட்டும் எங்கேயோ போய்விட்டது. இப்பொழுது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் கேப்டன் மில்லர்.

பீரியட் ஜானரில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமான பொருட்களின் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தென்காசி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காடுகளில் நடத்தப்பட்ட நிலையில் திடீரென்று அந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்படுவதாக சொல்லப்பட்டது.

Also Read: தனுஷ் படத்தோடு முடிந்த சகாப்தம்.. வாய்ப்புக்காக கணவரை தூது விட்ட நடிகை

ஆனால் கனமழை காரணமாக தான் படம் நிறுத்தப்பட்டது என்றும் படத்தின் சூட்டிங் நிறுத்தப்படவில்லை என்பதை மேக்கிங் பிலிப்ஸ் வீடியோ உடன் தனுஷின் மாஸ் கெட்டப்பை சமீபத்தில் வெளியிட்டு படக்குழு  அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது.

ஆனால் இப்போது அந்த வதந்தி எல்லாம் உண்மைதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னரே இந்த படம் நல்ல வியாபாரம் ஆனது. ஆனால் இந்த படத்தில் ஏற்பட்ட திடீர் பிரச்சினையால் தனுஷ் சொந்தமாக டிக்கெட் போட்டு படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்து விட்டார்.

Also Read: தனுஷின் சூப்பர்ஹிட் படத்தை மிஸ் பண்ண பாய்ஸ் பட நடிகர் .. இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்

வியாபாரம் ஆன படத்துக்கு இப்படி ஒரு பிரச்சினையா என்று தனுசை சமாதானப்படுத்தி வருகின்றனர். இந்த படம் நல்ல வியாபாரம் ஆனது. ஆகையால் இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டப்படுத்தி படத்திற்கு செட் எல்லாம் போட்டு அசத்தி வருகின்றனர்.

மறுபுறம் தனுசையும் சமாதானப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் கமிட்டான புதிய படத்தின் பூஜையும் தொடங்கியது. ஒருவேளை அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு தனுஷ் கிளம்பி விடுவாரோ என்றும் கேப்டன் மில்லர் பட குழு பதறுகிறது.

Also Read: அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் தனுஷின் ஐந்து பார்ட் 2 படங்கள்.. வெற்றிமாறனுக்கு மட்டும் ஒரு வருடம் கால்ஷீட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்