தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. செக் வைத்த உதயநிதி

Dhanush – Sivakarthikeyan : பொதுவாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களை தமிழ்நாட்டில் உதயநிதி தான் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படங்களை உதயநிதி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான கேஜிஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. வெளிநாடுகளில் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் கேப்டன் மில்லர் படத்தை தயாரித்திருந்தது.

மேலும் வெளிநாடுகளில் லைக்கா வெளியிட்டது. இந்த சூழலில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார். இப்போது மிஷன் படத்திற்கு வரவேற்பு அமோகமாக கிடைத்து வருகிறது.

Also Read : குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் தனுஷ்.. இணையத்தை கலக்கும் பேமிலி புகைப்படம்

இப்போது அயலான், கேப்டன் மில்லர் படங்களை காட்டிலும் இந்த படத்தை பார்க்க தான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அருண் விஜய்யின் மிஷன் படத்திற்கு 80 திரையரங்குகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

எனவே மிஷன் படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க உதயநிதி முடிவு எடுத்துள்ளார். இதனால் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்களின் வசூல் மந்தம் அடைய வாய்ப்பு இருக்கிறது. சைலன்டாக வந்து பெரிய நடிகர்களை இப்போது ஓரம்கட்டி விட்டார் அருண் விஜய்.

Also Read : வாத்தியை ஓரம்கட்டிய சிவகார்த்திகேயன்.. அயலான், கேப்டன் மில்லர் 5வது நாள் வசூல்

- Advertisement -spot_img

Trending News