புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அப்பத்தாவின் சோலியை முடிக்க திட்டமிட்ட குணசேகரன்.. ஜீவானந்தம் கொடுத்த எச்சரிக்கை, வெல்லப்போவது யார்?

Ethirneechal Serial Promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்திலிருந்து பரபரப்பாக சூடு பிடித்திருக்கிறது. அப்பத்தா தன்னுடைய 40 சதவீதம் சொத்தை யாருக்கு கொடுப்பார் என்று இருந்த மிகப்பெரிய கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. ஏற்கனவே பாம்பு போல சீறிக் கொண்டிருந்த குணசேகரனுக்கு இந்த முடிவு தலையில் இடியாய் விழுந்து விட்டது.

தன்னுடைய 40 சதவீத சொத்துக்களை கொள்ளு பேத்திகள் மற்றும் பேரன்கள் மேல் எழுதி வைத்துவிட்டார் அப்பத்தா. அவர்கள் மேஜராகும் வரை அந்த சொத்துக்களை வீட்டில் நான்கு மருமகள்கள் கவனித்துக் கொள்வார்கள் என்றும், அந்த சொத்துக்கு ஜீவானந்தம் தான் மேனேஜிங் டிரஸ்டி என்றும் திருவிழா மேடையில் அறிவித்து விட்டார்.

அது மட்டும் இல்லாமல் வெண்பா, ஈஸ்வரியை குணசேகரன் முன்னிலையில் அம்மா என்று அழைத்தது குணசேகரனுக்கு அடிவயிறு எல்லாம் பற்றி எரிந்து விட்டது. பொறுத்தது போதும், இனி அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்திற்கு கெடு வைத்துவிடலாம் என்ற முடிவை எடுத்திருந்தார். குணசேகரன் இப்படி ஒரு முடிவைத்தான் எடுப்பார் என்பது முன்னமே தெரிந்ததுதான்.

Also Read:குணசேகரன் திட்டத்தை தவடு பொடியாக்கிய தோழர்.. இனி மருமகள்களின் ஆட்டம் ஆரம்பம்

யாரும் எதிர்பாக்காத வகையில் குணசேகரன், அப்பத்தாவுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து விட்டார். அதை குடித்த அப்பத்தா மயக்கமாக இருப்பதை அறிந்துகொண்டு, வீட்டில் இருப்பவர்கள் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு குணசேகரன் யாரும் என்னுடன் வர வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என அப்பத்தாவை காரில் வைத்து கொண்டு போகிறார்.

ஜனனி மற்றவர்களை அழைத்துக்கொண்டு பின்னால் இன்னொரு காரில் போகிறார். அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் எல்லாம் விசாரித்தால் எங்கேயும் அப்பத்தாவை அட்மிட் செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. குணசேகரன் திட்டமிட்டபடி அப்பத்தாவை காரில் அழைத்துச் செல்கிறாரே தவிர மருத்துவமனையில் சேர்க்கவில்லை.

அப்பத்தாவை தேடி மொத்த பேரும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜீவானந்தம், ஈஸ்வரிக்கு போன் செய்து அப்பத்தா உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறார். குணசேகரன் அப்பத்தாவை எங்கே வைத்திருக்கிறார் என மருமகள்கள் கண்டுபிடித்தால் தான் அவரை காப்பாற்ற முடியும். எப்படி காப்பாற்றப் போகிறார்கள் என்பது இன்றைய எபிசோடில் தான் தெரிய வரும்.

- Advertisement -

Trending News