Connect with us

Reviews | விமர்சனங்கள்

Thantatti Movie Review-பசுபதியின் வித்தியாசமான நடிப்பில் தண்டட்டி முழு விமர்சனம்.. இழவு வீட்டில் இப்படி எல்லாம் நடக்குமா?

குறைந்த பட்ஜெட்டில் எதார்த்தமான கதையைக் கொண்டு தண்டட்டி படம் நகர்கிறது. இப்படத்தின் முழு விமர்சனத்தைப் பற்றி பார்க்கலாம்.

thantatti

Thantatti Movie Review: கிராமத்தின் மண்வளம் மாறாமல் புதிய மாறுபட்ட கதைகளத்தில் பாட்டிகளின் லூட்டியோட ஒரு சிறந்த படமாக களம் இறங்கும் “தண்டட்டி” திரைப்படம். திரை வரலாற்றில் முக்கிய படமாக இடம் பிடிக்கப் போகிறது. இப்படத்தில் பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, முகேஷ், தீபா ஷங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை ராம் சங்கையா இயக்கி, பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் லட்சுமி குமார் தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது தேனி மாவட்டத்தில் உள்ள கிடாரிப்பட்டியை சேர்ந்த மூதாட்டி காணாமல் போக, அவரைத் தேடும் முயற்சியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக பசுபதி நடித்திருக்கிறார். மூதாட்டி கதாபாத்திரத்தில் ரகுவரனின் மனைவி ரோகினி நடித்திருக்கிறார்.

Also read: நடிப்பு அரக்கன் பசுபதி ரசிகர்கள் மனதை வென்ற 6 படங்கள்.. கமலுக்கு நிகராக நடித்த ‘கொத்தாள தேவர்’

பிறகு ரோகிணி ஏன் காணாமல் போனார்? கண்டுபிடிக்கப்பட்டவர் எப்படி இறந்தார், அதன் பின் இழவு வீட்டில் தண்டட்டி காணாமல் போகிறது. அது எப்படி என்று அனைத்தையும் கண்டுபிடிக்கும் பொறுப்பில் பசுபதி அவருடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இப்படத்திற்கு கூடுதலாக பலம் சேர்த்திருக்கிறார்.

அதாவது இறுதிச் சடங்கு முடியும் வரை பசுபதி அந்த கிராமத்தில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. பின்பு அங்கு இருக்கும் கிடாரிப்பட்டி ஊர் மக்களால் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி தவித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் நிகழ்வு நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் கதையாக அமைந்திருக்கும்.

Also read: சரத்குமார், மீனா இணைந்து கலக்கிய 5 படங்கள்.. நாட்டாமை தம்பி பசுபதியை மறக்க முடியுமா?

மேலும் இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டு மக்களின் பொழுதுபோக்கிற்கு எந்தவித குறைச்சலும் இல்லாமலும், அத்துடன் இறுதியில் ஒரு அழகான காதல் கதையுடன் நிறைவடைகிறது. இதில் இளம் வயது தங்கப்பொண்ணு கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி நடித்திருக்கிறார்.

இதில் இவருடைய காதல் கதை மனதை நெகிழ வைத்து ரசிகர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. மேலும் ரோகிணியின் குடிகார மகனாக நடித்திருக்கும் தீபா சங்கர் அவருடைய பங்குக்கு கதாபாத்திரத்தை நன்றாக நடித்துக் காட்டி இருக்கிறார். ஆக மொத்தத்தில் குறைந்த பட்ஜெட்டில் எதார்த்தமான கதையைக் கொண்டு தண்டட்டி படம் நகர்கிறது.

Also read: பசுபதியை வளர்த்துவிட்ட 6 படங்கள்.. சார்பட்டா பரம்பரை படத்தில் மிரட்டிய ரங்கன்

Continue Reading
To Top