பசுபதியை வளர்த்துவிட்ட 6 படங்கள்.. சார்பட்டா பரம்பரை படத்தில் மிரட்டிய ரங்கன்

கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவில் நுழைந்தவர் பசுபதி. இவர் ஒரு நல்ல திறமையான நடிகர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார் போல் கனகச்சிதமாக நடிக்க கூடியவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் பசுபதி நடித்துள்ளார். தற்போது பசுபதியை வளர்த்துவிட்ட 6 படங்களை பார்க்கலாம்.

குசேலன் : பி. வாசு இயக்கத்தில் ரஜினி, பசுபதி, மீனா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குசேலன். இப்படத்தில் முடி திருத்தும் ஏழை தொழிலாளியாக பசுபதி நடித்திருந்தார். சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் நண்பனான பசுபதி அவரிடம் உதவி கேட்க தயங்குகிறார். இதில் பசுபதியின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

Also Read :பசுபதி நடிப்பில் மிரட்டிய 6 படங்கள்.. கமலையே நடிப்பில் ஓவர்டேக் செய்த படம்

வெயில் : வசந்த பாலன் இயக்கத்தில் பரத், பசுபதி, பாவனா, ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வெயில். இந்தப் படத்தில் பரத்தின் அண்ணனாக பசுபதி நடித்திருந்தார். சிறுவயதிலேயே திருடிவிட்டதாக வீட்டிலிருந்து வெளியேறிய மகன் பல வருடங்கள் கழித்து வந்த பிறகும் அவனை குடும்பம் எப்படி பார்க்கிறது என்பது தான் இப்படத்தின் கதை.

மஜா : விக்ரம், அசின், பசுபதி, மணிவண்ணன், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மஜா. இப்படத்தில் விக்ரமின் சகோதரராக ஒரு வெளந்தியான கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருந்தார். இவரது இந்த கதாபாத்திரம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது.

Also Read :பசுபதி நடிப்பில் மறக்க முடியாத 6 கதாபாத்திரங்கள்.. முருகேசனாய் கண்ணீர் விட வைத்த தியாகம்

விருமாண்டி : கமலஹாசன் இயக்கம், தயாரிப்பு, நடிப்பில் வெளியான திரைப்படம் விருமாண்டி. இந்தப் படத்தில் கொத்தலா தேவன் என்ற கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருந்தார். இதில் கமல்ஹாசன் மற்றும் பசுபதியின் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா : கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, சூரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்த படத்தில் வித்தியாசமான காமெடி கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருந்தார். அவரது அண்ணாச்சி கதாபாத்திரம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

சார்பட்டா பரம்பரை : பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்தப் படத்தில் சார்பட்டா பரம்பரையின் வாத்தியாராக ரங்கன் கதாபாத்திரத்தில் பசுபதி மிரட்டி இருந்தார்.

Also Read :கண்ணிலேயே சினிமாவிற்குப் ஃபார்முலா சொன்ன பசுபதி.. குருநாதா இத்தனை நாள் எங்க போனீங்க!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்