மண்டையில் மசாலா இல்லாமல் நடந்து கொண்ட 6 கிரிக்கெட்டர்ஸ்.. வாயில புண்ணோடு கிளம்பிய கௌதம் கம்பீர்

கோபத்தில் தேவையில்லாததை பேசி மாட்டிக்கொண்டு, அதற்கு சப்பைக்கட்டு கட்டி அசிங்கப்பட்ட 6 கிரிக்கெட் வீரர்களின் கதை தான் இந்த கட்டுரை. அப்படி ஒரு வீரரை பார்த்து மற்றொரு வீரர் ஏளனம் செய்து அதற்கு தகுந்த பதிலடி வாங்கி அசிங்கப்பட்டுள்னர். அப்படி மோசமாய் நடந்த 6 சம்பவங்களை பார்க்கலாம்.

ரெய்னா- ஜடேஜா: விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாடும்போது இவர்கள் இருவரும் ஒரு போட்டியில் காரசாரமாக மோதிக்கொண்டனர். ஜடேஜா பந்தில் இரண்டு கேட்ச்சிகளை கோட்டை விட்டார் ரெய்னா, அதற்கு ஜடேஜா அவரிடம் சண்டைக்கு சென்று விட்டார்.

ஹர்பஜன்- சைமன்ஸ்: ஹர்பஜன்சிங் ஒரு போட்டியில் சைமன்சை பார்த்து குரங்கு என்று கூறிவிட்டார். அப்பொழுது மைதானத்திலேயே இருவரும் மல்லு கட்டி கொண்டனர். இது இன ரீதியாக ஆஸ்திரேலிய நாட்டில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஹர்பஜன் சிங்கக்கு எதிராக பிசிசியை கண்டனம் தெரிவித்தது.

கௌதம் கம்பீர் விராட் கோலி: கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் ஏதாவது லூஸ் டாக் விட்டுக் கொண்டே இருப்பார் கௌதம் கம்பீர். இந்திய அணியில் விராட் கோலியை நீக்க வேண்டும் என்று ரொம்ப காலமாய் கொடி பிடித்து வருகிறார். இப்பொழுது நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளிலும் அவரை நீக்கிவிட்டு சூரியகுமார் யாதவை அணியில் சேர்க்க வேண்டுமாம்.

ஜெஃப்ரி பாய்கார்ட்- சேவாக்: மூளை இல்லாத கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் என்று வசை பாடினார் பாய்கார்ட். அதற்கு தன்னலம் இல்லாமல் விளையாடுவதற்கு பெயர் அவர் அகராதியில் மூளை இல்லாத வீரர் என்று சேவாக் அவருக்குபதிலடி கொடுத்தார்.

ஸ்ரீசாந்த் – ஹர்பஜன்சிங்: ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணி வீரர்கள் இருவர் சண்டை போட்டது அப்பொழுது பெரும் பேசு பொருளாக மாறியது. ஜெயித்த மமதையில் ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்கிடம் திமிராய் வாய் பேசி செவிலில் அடி வாங்கி சென்றார். பொதுவெளியில் அழுது புலம்பி தள்ளிவிட்டார் ஸ்ரீசாந்த்.

வெங்கடேஷ் பிரசாத் -அமீர் சோஹேல்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கேப்டன் அமீர் சோஹேல், வெங்கடேஷ் பிரசாத்தின் பந்தை பவுண்டரிக்கு அடித்து விட்டு அவரை கூப்பிட்டு இதுதான் உன்னுடைய பந்தின் நிலைமை என்று கூறினார். கோபப்பட்ட பிரசாத் அடுத்த பந்தில் ஸ்டம்புகளை பறக்க விட்டார். இன்று வரை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத தருணம் அது.