சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

யாருன்னு தெரியாம வாய குடுத்துட்டியே கூல் சுரேஷ்.. வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்ட விஷ்ணு

Cool Suresh: வெளியிலேயே இவரது அட்ராசிட்டி தாங்க முடியாது, இவரைப் போய் பிக் பாஸில் விட்டால் சும்மாவா இருப்பாரு. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. நேற்று நடந்த ஒரு டாஸ்க்கில் கூல் சுரேஷுக்கும் பெண் போட்டியாளருக்கும் கடும் வாக்குவாதம் முற்றியது.

சும்மா கிடந்த சங்க ஊதி கெடுப்பானா ஆண்டி என்ற மாதிரி டாஸ்கை முடித்த பிறகு சகஜமாக பேசிக் கொண்டிருக்கும் போது மாயாவிடம் சென்ற கூல் சுரேஷ், ‘மூத்த பொண்ணு மாதிரி இருந்த, இப்போ பீத்த பொண்ணு மாதிரி இருக்க’ என்று கலாய்த்தார்.

Also Read: கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தால் அவன் என் லவ்வரா? பிக் பாஸில் புது உருண்டை உருட்டும் ரவீனா

கொஞ்சம் கூட சபை நாகரிகம் தெரியாமல் பேசிய கூல் சுரேசை மாயா வெளுத்து வாங்கிவிட்டார். இப்படி எல்லாம் பேசாதீர்கள், எனக்கு சுத்தமாகவே பிடிக்காது என்று கட் அண்ட் ரைட்டாக பேசினார். பிறகு மாத்தி மாத்தி ஏதேதோ பேசி சுரேஷ் சமாளித்தார்.

அப்படியும் சமாதானம் ஆகாத மாயா, அதெல்லாம் தப்பு அந்த வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க! என்று கராராக கூறினார். பிறகு சிறிது நேரம் கழித்து விஷ்ணுவும் கூல் சுரேஷும் வீட்டுக்கு வெளியில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மறுபடியும் மாயா மற்றும் கூல் சுரேஷ் இருவருக்கும் முட்டிக்கொண்டது. இடையில் தேவையில்லாமல் விஷ்ணு குறுக்கிட்டார்.

Also Read: 3 பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. சாதுரியமாக காய் நகர்த்தும் வனிதாவின் வாரிசு

வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்ட கதையா, கூல் சுரேஷ் மாயாவிற்கான பிரச்சனை மறைந்து, விஷ்ணு மாயாவுக்கான பிரச்சினையாக மாறியது. ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டு பிக் பாஸ் வீட்டை அலறவிட்டனர்.

இந்த நிகழ்ச்சி துவங்கிய ஒரு சில நாட்களிலேயே பிக் பாஸ் வீடு சந்த கடை போல் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் குடுமிபிடி சண்டை எல்லாம் அசால்டாக நடக்கும் போல. நிச்சயம் இந்த சீசன் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் காரசாரமாக இருக்கும் என்பது இப்பவே தெரிஞ்சிருச்சு.

Also Read: விஜய் டிவி மானமே உங்க கையில தான் இருக்கு.. 18 போட்டியர்களின் சம்பள விவரத்தை கசிய விட்ட பிக்பாஸ்

- Advertisement -

Trending News