சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இது எல்லாத்தையும் சரிகட்ட தான் இந்த லியோ சக்சஸ் மீட்.. லலித் தாஸ் உருட்டுக்கு நாளையோட ஒரு முடிவு!

Leo Success Meet-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் வெளியான லியோ கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலை பொருத்தவரையில் லாபகரமாகத் தான் இருக்கிறது. தற்போது வரை 530 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. ஆனால் அதிலும் சில முறைகேடுகள் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. இருப்பினும் கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல கதையாக லியோ சக்ஸஸ் மீட் நாளை நடைபெற இருக்கிறது.

நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கும் இந்த நிகழ்வு தற்போது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பட வெளியிட்டிருக்கும் முன்பாக ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் சில பல பிரச்சனைகளின் காரணமாக அது நடைபெறாமல் போனது. தற்போது அதற்கும் சேர்த்து சிறப்பாக நடக்க இருக்கிறது இந்த லியோ சக்சஸ் மீட்.

ஏனென்றால் லியோ வெளி வருவதற்கு முன்பாக சந்தித்த பிரச்சனைகள் கணக்கிலேயே அடங்காதது. விஜய்யின் அரசியல் வருகைக்கான செயல்பாடுகளும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் தயாரிப்பு தரப்பு, லோகேஷ் என அனைவரும் படத்தைப் பற்றி பல மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தனர்.

ஆனால் அது அத்தனையும் நல்ல உருட்டு என லியோ ரிலீஸுக்கு பிறகு கருத்துக்கள் எழுந்தது. அது மட்டுமின்றி விஜய், சங்கீதா பிரச்சனையும் இப்போது வரை ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் அவருடைய மகன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுப்பதற்கு பின்னால் இருக்கும் விஷயம் என விஜய்யை சுற்றி பல கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கிறது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக தயாரிப்பாளர் லலித் பாக்ஸ் ஆபிஸ் மோசடியில் இறங்கியது பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் கசிந்து வருகிறது. இவை அனைத்திற்கும் பதில் சொல்லும் விதமாகத்தான் இந்த சக்சஸ் மீட் நடக்க இருக்கிறது. அது மட்டுமின்றி லலித் தாஸ் உருட்டுக்கு நாளை ஒரு முடிவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விழாவிற்கு நாம் எதிர்பார்க்காத பல பிரபலங்கள் வர இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் விஜய் தன்னுடைய ஸ்டைலில் ஒரு குட்டி கதையையும் சொல்ல இருக்கிறார்.

அது ரஜினி சொன்ன காக்கா பருந்து கதைக்கு பதிலடியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சமூகமாக நடக்க வேண்டும் என்பதுதான் படகுழுவினரின் தற்போதைய எண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் சக்சஸ் மீட்டுக்காக தயாராகும் லியோ தாஸ் என்ன சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறார் என்பதை நாம் விரைவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

Trending News