கோவில் கோவிலா சுத்திய சந்திரமுகி, வேட்டையன் தேறுமா, தேறாத.? சாவு பயத்தை காட்டிய முழு விமர்சனம்

Chandramukhi 2 movie review: வழக்கமான பேய் படங்களில் இருந்து தனித்து தெரிந்த சந்திரமுகி வெளிவந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் அது நம் உணர்வோடு கலந்ததை யாரும் மறுக்க முடியாது. அதனாலேயே அதன் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த ஆவலை சந்திரமுகி 2 பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை சிறு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

ரங்கநாயகி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் ராதிகாவின் குடும்பம் தொடர்ந்து பல அசம்பாவிதங்களால் பாதிக்கப்படுகிறது. அதனால் குலதெய்வ கோவிலுக்கு பூஜை செய்ய தயாராகும் அவர்கள் சந்திரமுகி பங்களா இருக்கும் ஊருக்கு வருகின்றனர். அனைவரும் எதிர்பார்த்தது போல் அவர்கள் அனைவரும் அங்கு தான் தங்குகின்றனர்.

Also Read: லக்க லக்க லக்கா, நிஜ சந்திரமுகியின் ஆட்டம் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண் சந்திரமுகி அறைக்கு செல்கிறார். அதனால் ஏற்படும் குழப்பத்தால் ஒரிஜினல் சந்திரமுகியே இறங்கி வந்து ஆட்டம் காட்டுகிறார். அவரை அடக்க வரும் வேட்டையன் அதை செய்தாரா, அந்த குடும்பம் குலதெய்வ பூஜையை முடித்ததா என்பது தான் இப்படத்தின் கதை.

முதல் பாகம் மனோதத்துவ பாணியில் எடுக்கப்பட்டு நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருந்தது. ஆனால் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க பேய் ட்ராக்குக்கு மாறிவிட்டது. அதனாலேயே எதிர்பார்த்த சுவாரஸ்யம் குறைவதை நம்மால் தடுக்க முடியவில்லை.

Also Read: சைக்கோ கொலைகாரனோடு மோதும் சந்திரமுகி 2.. மரண பீதி கண்ணுலயே தெரியுது மாஸ்டர்

இருப்பினும் முதல் பாகத்தின் பெருமையை குறைக்க கூடாது என்று இயக்குனர் மெனக்கெட்டிருப்பது காட்சிகளில் நன்றாகவே தெரிகிறது. அதைத் தொடர்ந்து பிரம்மாண்டமான காட்சிகளும் பின்னணி இசையும் ஓகே ரகமாக இருக்கிறது. ஆனால் பாடல்கள் பெரிய அளவில் இருக்கவில்லை. ஆஸ்கார் விருது வாங்கிய கீரவாணி இந்த அளவுக்கு சொதப்பியது நம்ப முடியாத அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

அதேபோன்று ரஜினி ரசிகர் என்று பெருமையாக சொல்லும் ராகவா லாரன்ஸ் படத்திலும் அப்படியே அவரை ஜெராக்ஸ் எடுத்தது போல் நடித்திருக்கிறார். அதை கொஞ்சம் தவிர்த்து இருந்தால் வித்தியாசம் தெரிந்திருக்கும். மேலும் நிஜ சந்திரமுகியாக வரும் கங்கனாவை பார்க்கும் போது ஜோதிகாவின் ஆக்ரோஷமான பார்வையும், மிரட்டல் நடிப்பும் தான் கண் முன்பு கிராஸ் ஆகிறது.

Also Read: ஜெய் பீம் மாதிரி ஒரு வெற்றி வேணும், நம்ம கிட்ட 3 கதை இருக்கு தலைவரே.. ரஜினி தேர்வு செய்த தலைவர்-170 இதுதான்

இதனாலேயே கங்கனா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தும் கூட ஏதோ ஒன்று குறைவதாகவே தோன்றுகிறது. அதை தாண்டி வடிவேலுவின் காமெடி பழைய உருட்டாக தான் இருக்கிறது. இதற்காகத்தான் கோவில் கோவிலா விசிட் அடித்தீர்களா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. அந்த வகையில் இந்த சந்திரமுகி 2 நம்மை கொஞ்சம் சோதித்து பார்த்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.25/5

Next Story

- Advertisement -