Connect with us

Entertainment | பொழுதுபோக்கு

ஏஆர் ரகுமானை மேடையில் அசிங்கப்படுத்திய 3 பிரபலங்கள்.. திருப்பி வச்சு செய்த இசை புயல்

மேடையில் ஏ ஆர் ரகுமானை கடுப்பேற்றிய மூன்று பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

ar-rahman

AR Rahman: தமிழ் சினிமாவிற்கு இந்திய அளவில் நல்ல பெயரை வாங்கித் தந்தது மட்டுமல்லாமல் ஆஸ்கார் விருதையும் பெற்று தந்த இசை புயல் ஏஆர் ரகுமானை மூன்று பிரபலங்கள் பொது மேடையில் அசிங்கப்படுத்திய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அவர்களுக்கு அதே இடத்திலேயே ஏஆர் ரகுமான் பதிலடியும் கொடுத்திருக்கிறார்.

சல்மான் கான்: பாலிவுட்டில் இருக்கும் டாப் நடிகர்கள் அதே பாலிவுட்டில் இருக்க கூடிய இளம் நடிகர்களையும், பிற மொழி நடிகர்களையும் மட்டம் தட்டி பேசுவதை அல்வா சாப்பிடுவது போல் நினைத்துக் கொண்டு பொது மேடைகளில் அசிங்கப்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதேபோல் தான் ஒரு முறை சல்மான் கானும் ஏஆர் ரகுமானும் ஒரே மேடையில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

அப்போது சல்மான் கான் ஏஆர் ரகுமானை பார்த்து, ‘முன்பு போல் ஏஆர் ரகுமான் இசையமைப்பதில்லை’ என்று சிரித்துக் கொண்டே நக்கலாக அவரை கிண்டலடித்தார். பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் அந்த மேடையில் திடீரென்று சல்மான்கான் கடுப்பேற்றியதும் ஏஆர் ரகுமான் டென்ஷன் ஆகிவிட்டார். அப்போது அவரை சல்மான் கான் கையைக் கொடுத்து சமாதானப்படுத்த நினைத்தாலும், அந்த நிமிடம் கையை உதறி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Also Read: என் வாழ்க்கையிலே உருப்படியான படம் இதுதான்.. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் ஜெயம் ரவி போட்ட பூஜை

பார்த்திபன்: நடிகர் பார்த்திபனும் ஏஆர் ரகுமானும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பார்த்திபன் மைக் வேலை செய்யவில்லை என்று கோபத்தில் மைக்கை தூக்கி வீச, உடனே மேடையில் அமர்ந்திருந்த ஏஆர் ரகுமான் கொஞ்ச நேரம் அப்செட் ஆனார்.

ஆனால் பார்த்திபன் சிறிது நேரத்தில் கோபம் தணிந்ததும் அங்கிருப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏஆர் ரகுமானையும் குறிப்பிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதால் சிறிது நேரத்தில் அந்த விழா மறுபடியும் கலை கட்டியது. இருப்பினும் ஏஆர் ரகுமானுக்கு பார்த்திபன் பொது நிகழ்ச்சிகள் இவ்வளவு கோபமாக நடந்து கொண்டது சுத்தமாகவே பிடிக்கவில்லை.

Also Read: உதயநிதிக்காக தலையை கொடுத்து அவமானப்பட்ட பிரபலம்.. கூட இருந்து குழி வெட்டிய மாரி செல்வராஜ்

ராதாரவி: இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம், பல வருடங்களாக சினிமா அனுபவத்தை கொண்ட ராதாரவி ஓவர் அகம்பாவத்தோடு தான் ஒவ்வொரு மேடை நிகழ்ச்சிகளிலும் பேசுவார். யாருக்குமே சுத்தமாக மரியாதை கொடுக்க மாட்டார்.

அப்படித்தான் ஒருமுறை ஏஆர் ரகுமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரைப் பற்றி பேசும் போது, ‘இன்னைக்கு ஏஆர் ரகுமான் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் இவன் இளையராஜாவிற்கு கீழ் வேலை பார்த்தவன்’ என ஒருமையில் பேசியதால் ரகுமான் டென்ஷன் ஆனார்.

Also Read: ஐம்பூதங்களையும் ஒரே படத்தில் இசையமைத்துக் கொடுத்த ஏஆர் ரகுமான்.. 5 பாட்டுமே செம ஹிட்

Continue Reading
To Top