வெள்ள நிவாரண நிதிக்கு ஸ்டாலினிடம் கொட்டிக் கொடுத்த சன் பிக்சர்ஸ்.. ஹீரோக்கள் முதலாளியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

Celebrities contribute money to chief minister for flood relief fund: தமிழக அரசு மிக்ஜாம் புயலின் முன் அறிவிப்பை அறிந்து பலவித முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் அது எதையும் கண்டுகொள்ளாமல் புரட்டி போட்டது புயல். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் அனைத்தும் மழை நீரால் தத்தளித்தன.

புயல் கரையை கடந்த பின்னும் பெருவாரியான இடங்களில் மழை நீர்  வடிய மறுத்து ஆர்ப்பாட்டம் பண்ணியது.  நிலைமையை சமாளிக்க முடியாமல் மக்கள் ஆங்காங்கே கொதித்து எழுந்தனர். அரசியல்வாதிகளோ ஆளும் கட்சியை குறைக்கூறி அரசியல் செய்தனர்.

சேதங்களை சரி செய்யும் பொருட்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் முதல்வர்.  இதனை தொடர்ந்து தன்னுடைய ஒரு மாத சம்பளத்தையும் வழங்கி உள்ளார்.முதல்வரின் வேண்டுகோளை ஏற்ற பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

Also read: புயலால் தத்தளிக்கும் சென்னை, டாப் ஹீரோக்கள் சூர்யா, கார்த்திக்கை பார்த்து கத்துக்கோங்க!

தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்கார சிஇஓ களான சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவி காவேரி கலாநிதி மாறன் அவர்கள் முதலமைச்சரை சந்தித்து, பொது நிவாரண நிதியாக 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி உள்ளனர்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய நெட்வொர்க் சன் நெட்வொர்க். கால் நூற்றாண்டுக்கு மேலாக தனது சேனலின் மூலம் தமிழகத்தை ஆதிக்கம் செலுத்தி வருகிறார் கலாநிதி மாறன். சன் பிக்சர்ஸின் உரிமையாளரான இவரின் தயாரிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வசூல் மட்டுமே 650 கோடி.

இந்தியாவில் 43வது இடம், தமிழகத்தில் நம்பர் ஒன் பணக்காரர் ஆக விளங்கும் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு சுமார் 19,100 கோடி மட்டுமே. ஏதோ போற போக்குல ஒரு சோசியல் சர்வீஸ் பண்ணி கொண்டிருக்கிறார் கலாநிதிமாறன் அவர்கள். இவரை போல் பெரும் புள்ளிகள் கொஞ்சமாக கொடுத்தாலும் சென்னை நிவாரணம் அடைவது சாத்தியமே!

Also read: அஜித் CM ஆவது உறுதி.! அவர் சுயம்பு மாதிரி, 100% அடித்துக் கூறும் அவள் வருவாளா ராஜ்கபூரின் காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்