பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் அவதார் 2.. பிரமிக்க வைத்த முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

ரசிகர்கள் பல வருடங்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வந்த அவதார் 2 திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தான். ஏற்கனவே டைட்டானிக் என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த இவர் அவதார் என்ற சிறந்த படைப்பை கொடுத்து பலரையும் மிரட்டினார்.

இதுதான் இந்த அவதார் 2 திரைப்படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த வகையில் இப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட ஆறு மொழிகளில் வெளியாகி உள்ள இப்படம் இப்போது ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Also read: 13 வருடமாக காக்க வைத்து புதிய உலகிற்கு கூட்டிச் சென்ற அவதார் 2.. எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

இப்படத்தின் ரிலீஸ் தேதியை பார்த்து மிரண்டே பல முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களின் ரிலீஸை தள்ளி வைத்தனர். அந்த அளவுக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் இப்போது வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது நம் இந்திய ரூபாயை கணக்கிட்டு பார்த்தால் கிட்டத்தட்ட 3000 கோடிக்கு மேல் வரும். அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட அத்தனை படங்களின் சாதனையையும் முறியடித்து வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ப்ரீ புக்கிங் மிகப்பெரும் சாதனையை படைத்த நிலையில் தற்போது இப்படத்தின் வசூலும் அனைவரையும் மிரள வைத்துள்ளது.

Also read: அவதார் 2 படம் தமிழில் வெளியாவதில் சிக்கல்.. தியேட்டர் உரிமையாளர்களுக்கு வைத்த செக்

அந்த வகையில் இப்போது வரை இத்திரைப்படம் 16 மில்லியன் டாலர் வரை வசூலித்திருக்கிறது. மேலும் இன்றைய நாளின் முடிவில் இத்திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளிலேயே இப்படி ஒரு கலெக்சனை பெற்று சாதனை படைத்த இந்த அவதார் அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் மிரட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் ஐந்து பாகங்களாக வெளிவர இருக்கிறது. அதன்படி இதன் 3ம் பாகம் 2024 ஆம் ஆண்டும், நான்காம் பாகம் 2026 ஆம் ஆண்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியுள்ள இந்த அவதார் 2 2022ம் வருடம் வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் பெற்ற திரைப்படமாகவும் இருக்கிறது.

Also read: புது ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை மிரளவிட்ட அவதார் 2.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கும் 3D மூவி

- Advertisement -spot_img

Trending News