பிளாக்பஸ்டர் ஹிட் பட டீமே இப்படி ஆடல.. வெட்கமே இல்லாமல் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி

vijay-sethupathy-actor
vijay-sethupathy-actor

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெற்றி நாயகனாக வலம் வந்த விஜய் சேதுபதி சமீபகாலமாக தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்து வருகிறார். மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய அவருக்கு அடுத்தடுத்து அது போன்ற கதாபாத்திரங்களே வந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே அவர் ஹீரோவாக நடிக்கும் கதைகளை சரியாக தேர்ந்தெடுப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.

அதற்கேற்றார் போல் நேற்று அவர் நடிப்பில் வெளிவந்த டிஎஸ்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து விஜய் சேதுபதி ஏன் கதை விஷயத்தில் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகிறார் என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த அளவுக்கு டிஎஸ்பி திரைப்படம் படு மொக்கையாக இருந்ததாக கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

Also read: 5 வருடமா தயாரிப்பாளர் காசை நாசமாக்கிய விஜய் சேதுபதி.. ஹீரோவாக மண்ணைக் கவ்விய 10 படங்கள்

ஏற்கனவே சீமராஜா, எம்ஜிஆர் மகன் போன்ற திரைப்படங்களின் மூலம் படுதோல்வியை சந்தித்த பொன்ராம் மீண்டும் இப்படி ஒரு கதையை எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தால் இனிமேல் அவருக்கு அடுத்த வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம் தான். இப்படி இந்த திரைப்படத்தை ஆளாளுக்கு கழுவி ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் பட குழு தற்போது சக்சஸ் பார்ட்டி கொண்டாடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

vijay-sethupathy-dsp
vijay-sethupathy-dsp

முன்பெல்லாம் படம் வெளியாகி ஐம்பதாவது நாள், நூறாவது நாள் என்று கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இப்போது 10 நாட்கள் ஆனாலே சக்ஸஸ் பார்ட்டி வைத்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த டிஎஸ்பி டீம் அவர்களை எல்லாம் ஓரம் கட்டும் வகையில் ஒரு நாளிலேயே பிளாக்பஸ்டர் ஹிட் என்று கூறி தம்பட்டம் அடித்திருப்பது கேவலமாக இருக்கிறது.

Also read: காத்து வாங்கும் தியேட்டர்கள், அரண்டு ஓடும் ஆடியன்ஸ்.. விஜய் சேதுபதியின் டிஎஸ்பி முழு விமர்சனம்

மேலும் பட குழுவினர் விஜய் சேதுபதிக்கு பெரிய மாலையாக அணிவித்து இந்த பட வெற்றியை கொண்டாடி இருக்கின்றனர். அந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் நம்ப முடியாத அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பெரிய படங்களே இந்த அளவுக்கு ஆட்டம் போட்டது கிடையாது.

ஆனால் டிஎஸ்பி பட குழு எந்த தைரியத்தில் இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றி என்று கூறுகிறார்கள் என்று தான் புரியவில்லை. ஏனென்றால் படம் வெளியான போது முதல் காட்சிக்கு எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை. அதற்கு அடுத்தடுத்த காட்சிகளையும் பார்ப்பதற்கு ஆள் இல்லாமல் தியேட்டர்கள் காத்து வாங்கி இருக்கிறது. இப்படி இருக்கும் போது ரசிகர்களை ஏமாற்றும் வகையில் பட குழுவினர் ஒரு போட்டோவை வெளியிட்டு இருப்பது தற்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

Also read: சகட்டுமேனிக்கு சமீபத்தில் வெயிட் போட்ட 5 நட்சத்திரங்கள்.. தொப்பை குலுங்க குலுங்க வரும் டிஎஸ்பி விஜய் சேதுபதி

Advertisement Amazon Prime Banner