விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போதுமே நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடும். உலகநாயகன் தொகுத்து வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும் சண்டைக்கோழிகளாக சீறும் போட்டியாளர்கள் தான் நிகழ்ச்சியின் ஹைலைட்டே.
இதுவரை நடந்து முடிந்த 7 சீசன்களில் கடந்த சீசன் தான் அதிக விமர்சனங்களை பெற்றது. அதில் வில்லி ரேஞ்சுக்கு இருந்த இரண்டு போட்டியாளர்கள் என்றால் அது மாயா மற்றும் பூர்ணிமா தான்.
இருவரும் சூனியக்காரிகள் போல் வீட்டில் இருப்பவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது கலாய்ப்பது என பார்வையாளர்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்கு ஆளானார்கள். அதேபோல் பிரதீப் ரெட் கார்டு விஷயத்தில் இவர்களின் அட்டூழியம் கொஞ்ச நஞ்சம் அல்ல.
வாய்ப்பு தேடும் பூர்ணிமா
ஆனால் எந்த நெகட்டிவ் விமர்சனங்களையும் அவர்கள் கண்டு கொள்வது கிடையாது. அதிலும் பூர்ணிமா சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடியவர். மோசமான கமெண்ட்டுகள் வந்தாலும் அதை தூசு போல் தட்டி விடுவார்.
யூடியூப் சேனல்களில் பிஸியாக இருந்த பூர்ணிமா இப்போது தீவிர பட வேட்டையில் இறங்கி இருக்கிறார். ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோயின் ஆக நடிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய பெரிய ஆசை.
அதனாலேயே விதவிதமாக போட்டோ ஷூட் செய்து சோசியல் மீடியாவில் அதை வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது அவர் மிரர் செல்பியில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அத்தனையும் கிளாமர் ரகம் தான். அதிலும் வெள்ளை நிற உடையில் கொஞ்சம் கிளாமர் தூக்கலாக இருக்கும் அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. இதையெல்லாம் பார்த்தாவது அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தால் சரிதான்.
பிக் பாஸ் பூர்ணிமாவின் கலக்கல் மிரர் செல்பி
- 2வது திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்
- மாடர்ன் குத்து விளக்காக மாறிய ரட்சிதா
- சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கவர்ச்சியாக மாறிய ரட்சிதா