Biggboss: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போதுமே டிஆர்பியில் முதலிடத்தை தட்டி தூக்கி விடும். அதனாலேயே கடந்த ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
அதைத் தொடர்ந்து தற்போது எட்டாவது சீசனும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதற்கான போட்டியாளர்களின் தேர்வு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாம் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்டுகள் காத்திருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்ட அபிஷேக் ராஜாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே இவர் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.
அபிஷேக் ராஜாவின் 2ம் திருமணம்
அதை அடுத்து இவர் ஆர் ஜே ஸ்வாதி என்பவர் உடன் நட்பில் இருந்தார். அந்த நட்பு தற்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது. தற்போது இவர்களின் கல்யாண போட்டோவும் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில் மணமக்கள் இருவரும் திருமண கோலத்தில் சந்தோஷமாக இருக்கின்றனர். மேலும் கல்யாணப் பெண் ஒரு சாயலில் நடிகை இனியாவை போன்று இருக்கிறார்.
அதையே தான் நெட்டிசன்களும் கூறி இந்த ஜோடியை வாழ்த்தி வருகின்றனர். ஆக மொத்தம் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தாலும் தற்போது புதிதாக ஒரு வாழ்க்கையை துவங்கி இருக்கும் அபிஷேக் ராஜாவுக்கு சோசியல் மீடியா பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
விரைவில் ஆரம்பமாகும் பிக்பாஸ் 8
- வரப்போகுது பிக்பாஸ் சீசன் 8
- மாடர்ன் குத்து விளக்காக மாறிய ரட்சிதா
- இந்த 5 காரணங்களால் மட்டுமே டைட்டில் வின்னர் ஆகிய அர்ச்சனா