வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கடுப்பேத்தும் அசீம் 2.0, புத்திசாலித்தனமாக காய் நகர்த்தும் வாயாடி பெத்த புள்ள.. சுவாரஸ்யமாகும் பிக்பாஸ் 7

Biggboss 7: எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற ரேஞ்சில் இருக்கும். அதன் பிறகு தான் சண்டை, சச்சரவு என்று சூடு பிடிக்க ஆரம்பிக்கும். ஆனால் இந்த 7வது சீசன் முதல் நாளிலிருந்தே சுவாரஸ்யத்தை அதிகரித்து கொண்டிருக்கிறது.

அதிலும் கவினின் தோஸ்த் பிரதீப் முதல் நாளிலேயே ஏகப்பட்ட வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார். அதை தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் மேதாவி போல் அவர் நடந்து கொள்வது கடந்த சீசன் அசீமை ஞாபகப்படுத்துகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் அவருடைய 2.0 தான் இந்த பிரதீப் ஆண்டனி.

Also read: விஜய் டிவி மானமே உங்க கையில தான் இருக்கு.. 18 போட்டியர்களின் சம்பள விவரத்தை கசிய விட்ட பிக்பாஸ்

தனக்கென ஒரு யுக்தியை வைத்துக்கொண்டு முதல் நாளிலேயே ஆட்டத்தை ஆரம்பித்த இவர் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவருக்கு அப்படியே எதிர் பதமாக வனிதாவின் மகள் ஜோவிகா சிறு பெண்ணாக இருந்தாலும் முதிர்ச்சியுடன் ஒவ்வொரு விஷயத்தையும் செய்கிறார்.

வனிதா எந்த அளவுக்கு எதிர்ப்புகளை சம்பாதித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் குட்டி கலாட்டா செய்து கெடுத்து விடுவார். ஆனால் ஜோவிகா புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி வருவது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Also read: கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தால் அவன் என் லவ்வரா? பிக் பாஸில் புது உருட்டை உருட்டும் ரவீனா

அதை வைத்துப் பார்க்கும்போது இந்த வாயாடி பெத்த புள்ள அதிக நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப் பிடிப்பார் என்று தோன்றுகிறது. மேலும் பூர்ணிமா, மாயா கிருஷ்ணன், விஷ்ணு உள்ளிட்டோரும் இப்போது ரசிகர்களின் கவனத்தை திருப்ப ஏதாவது ஒரு வகையில் முயற்சிக்கின்றனர்.

இதில் சிலர் மட்டும் இன்னும் ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் இந்த சீசன் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக செல்கிறது என்பது மட்டும் உண்மை. அந்த வகையில் முதல் வாரமே ரணகளமாக தொடங்கி இருக்கும் நிலையில் யார் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து டைட்டிலை தட்டிச் செல்வார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: யாருன்னு தெரியாம வாய குடுத்துட்டியே கூல் சுரேஷ்.. வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்ட விஷ்ணு

- Advertisement -

Trending News