பாக்கியா தலையில் விழுந்த பெரிய இடி.. ஆனந்த கூத்தாடும் கோபி, காலை வாரி விடும் மாமி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் ஒருவரின் வாழ்க்கையில் கொஞ்ச நஞ்ச பிரச்சனை வரலாம், ஆனால் பாக்கியாவிற்கு மட்டுமே பிரச்சனையே வாழ்க்கையாக இருக்கிறது. எப்படியாவது அம்பானியாகி விட வேண்டும் என்று போராடிவரும் பாக்கியாவிற்கு தொடர்ந்து சிக்கலாக வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் எதற்கும் அசராமல் போராடுகிறார்.

அதாவது பாக்யாவிற்கு பொருட்காட்சியில் சமைக்கும் ஆர்டர் கிடைத்தாலும் அதை முழுசாக கொண்டாட முடியாத அளவிற்கு ஒரு பூகம்பம் கிளம்பி இருக்கிறது. எப்படியோ அலைஞ்சு திரிஞ்சு ஆர்டரை கைப்பற்றிய பாக்கியா அதுக்கேற்ற மாதிரி சமையல்களை செய்து முடித்து விட்டார். ஆனால் போகும்போது பலத்த மழை இடி மின்னல் என்று வந்ததால் மாமியார் நீ போக வேண்டாம்.

அதற்கு பதிலாக யாரிடம் இருந்து ஆர்டரை வாங்கினியோ அவங்க கிட்டயே திருப்பி கொடுத்துவிடு என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பாக்யாவின் காலை வாரி விடுவது போல் பேசுகிறார். ஆனால் என்ன ஆனாலும் பரவாயில்லை நான் இந்த ஆர்டரை வெற்றிகரமாக முடித்து தீர்வேன் என்று மாமியாரிடம் சொல்கிறார்.

Also read: குணசேகரனை கதற விடுவதற்கு களம் இறங்கிய சாருபாலா.. புருஷன் மூஞ்சியில் கறியை பூசிய ஈஸ்வரி

இதனை தொடர்ந்து மழை அதிகமாக பெய்ததால் நாளை நடக்க இருக்கும் பொருட்காட்சி ரத்து செய்யப்படுவதாக இருக்கிறது என்ற செய்தியை கேட்ட பாக்யா தலையில் பெரிய இடி விழுந்த மாதிரி ஆகிவிட்டது. இதை தான் நான் எதிர்பார்க்கிறேன் என்பதற்கு ஏற்ப ஆனந்தத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறார் கோபி.

என்னதான் இருந்தாலும் கோபி பாக்கியா வீட்டிலேயே இருந்துகிட்டு அவர் போட்ட சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு உண்ட வீட்டுக்கே துரோகம் நினைப்பது நியாயமே இல்லை. இருந்தாலும் வழக்கம்போல் கடைசியில் பாக்கியா ஜெய்ப்பது போல தான் கதை நகரும். அதனால் இதையெல்லாம் பெரிசு படுத்தாமல் பாக்கியா எதிர்பார்த்தபடி பொருட்காட்சி நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

இல்லை என்றால் இதற்கும் பொறுப்பேற்று பழனிச்சாமி உள்ளே நுழைந்து பாக்கியாவிற்கு சாதகமாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்து விடுவார். இதற்கிடையில் ஜெனி மற்றும் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் கதையை அப்படியே மறந்து விட்டார்கள். இப்படி இரண்டு மகன்களின் வாழ்க்கை தத்துளித்துக் கொண்டிருக்கும் பொழுது பாக்யா எதையுமே சரி செய்யாமல் இருப்பது கொஞ்சம்லாஜிக் இல்லாத போல் இருக்கிறது.

Also read: பழைய நட்பில் கைகோர்த்த பாக்யா ராதிகா.. மொத்த வெறுப்பையும் ஒத்த நட்பால் மாத்தி காட்டிய சக்களத்தி