குணசேகரனை கதற விடுவதற்கு களம் இறங்கிய சாருபாலா.. புருஷன் மூஞ்சியில் கறியை பூசிய ஈஸ்வரி

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு குணசேகரன் நாளா பக்கமும் அடி வாங்க போகிறார். அத்துடன் தன் மனைவியை தனக்கு எதிராக மாறுவார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். ஈஸ்வரிக்கு வந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கிழித்துப் போட்டால் வேலைக்கு போக முடியாது என்று தற்குறியாக யோசித்து தப்பு கணக்கு போட்டிருக்கிறார்.

ஆனால் சாதிக்க வேண்டும் என்று துணிந்த பிறகு எத்தனை தடைகள் வந்தாலும் அதை தூக்கி எறிந்து சாதிக்க முடியும் என்பதை ஈஸ்வரி புரிய வைத்து விட்டார். இதனை அடுத்து குணசேகரன் மூஞ்சியில் கறியை பூசும் விதமாக என்னை யாரும் தடுக்க முடியாது. நான் வேலைக்கு போக வேண்டும் என்பதை முடிவு பண்ணிட்டேன். நான் என்ன பண்ண வேண்டும் என்று மற்ற யாரும் சொல்லத் தேவையில்லை என்று சரியான பதிலடி குணசேகரனுக்கு கொடுத்து விட்டார்.

அடுத்தபடியாக கல்லூரியில் ஈஸ்வரியை பார்த்து பேசும்படியான வாய்ப்பு சாறுபாலாவிற்கு கிடைக்கிறது. அப்பொழுது அப்பத்தாவின் இறப்பிற்கு ஆறுதல் சொல்லிய சாருபாலா எதேர்ச்சியாக ஜனனி சக்தியை சந்திக்க வாய்ப்பு வருகிறது. அப்பொழுது குணசேகரன் செய்த தில்லாலங்கடி வேலை அனைத்தையும் ஜனனி சாருபாலாவிடம் சொல்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி நீங்கள் குணசேகரனுக்கு எதிராக லாயராக ஆஜராக வேண்டும் என்று கேட்கிறார்.

Also read: எதிர்நீச்சல் சீரியலை ஒன்னும் இல்லாமல் ஆக்கிய சிங்கப்பெண்.. ஒத்த ஆளாக நின்னு சிக்ஸர் அடிக்கும் ஆனந்தி

ஆனால் சாறுபாலா நான் என்னுடைய பிசினஸ்க்காக படிச்சதோடு சரி எந்த பிராக்டிசும் பண்ணவில்லை என்று ஜனனி கேட்டதற்கு மறுத்துவிட்டார். அந்த நேரத்தில் சாறுபாலாவிற்கு அரசு போன் பண்ணி அருணை கார் ஆக்சிடென்ட் பண்ணி கால ஒடச்சது குணசேகரனும் கதிரும் தான் என்பது தெரிந்து விட்டது என்ற உண்மையை கூறுகிறார். அதனால் எப்படியாவது குணசேகரனை கம்பி எண்ண வைக்க வேண்டும் என்று நினைக்கும் சாருபாலா ஜீவானந்தம் விஷயத்தை கையில் எடுக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்.

உடனே ஜனனிடம் நானே ஆஜராகிறேன் என்று சொல்கிறார். இதனை தொடர்ந்து ஜீவானந்தத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட விசாரணையை நோண்ட ஆரம்பிக்கிறார். ஆனால் அதில் பல குளறுபடிகள் இருக்கிற உண்மையை தெரிந்து கொண்டார். இந்த ஒரு விஷயம் குணசேகரன் காதுக்கு போகிறது. கண்டிப்பாக சாருபாலா குணசேகருக்கு எதிராக வாதாடி ஜெயிக்கப் போகிறார்.

இதற்கு இடையில் ஜீவானந்தம் ஜனனிடம் பேசும் போது அப்பத்தா உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதற்கு மறைமுகமாக ஒரு ஹிண்டு கொடுத்திருக்கிறார். அதனால் சரியான நேரத்தில் அப்பத்தா என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டப் போகிறார். ஆக மொத்தத்தில் குணசேகரன் எல்லா விதத்திலும் தோற்றுப் போய் அவமானத்தில் கூணி குறுகி போய் நிற்கப் போகிறார்.

Also read: சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த பாக்கியா.. வீட்டை விட்டு வெளியேறும் மருமகள்