பழைய நட்பில் கைகோர்த்த பாக்யா ராதிகா.. மொத்த வெறுப்பையும் ஒத்த நட்பால் மாத்தி காட்டிய சக்களத்தி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி தன்னை விட்டுப் போன பிறகும் ஒத்த ஆளாக நின்னு குடும்பத்தை வழிநடத்தி வந்தார். இடையில் எத்தனையோ இடையூறுகள் ஏற்பட்ட நிலையிலும் அதையெல்லாம் தகர்த்து எறிந்து சொந்த காலில் நின்னு சாதித்துக் காட்டி விட்டார். இதனை அடுத்து எப்படியாவது அந்த கவர்மெண்ட் பொருட்காட்சி ஆர்டரை கைப்பற்றி விட்டால் தொழிலதிபராக ஆகிவிடலாம் என்ற நினைப்பில் வைராக்கியத்துடன் போராடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பழனிச்சாமி மூலம் பாக்யாவிற்கு அந்த கவர்மெண்ட் ஆர்டர் கிடைத்து விடுகிறது. இந்த சந்தோஷத்தை வீட்டில் இருப்பவர்களிடம் பாக்யா வந்து கூறுகிறார். ஆனால் கிடைக்காத போது கரித்துக்கொட்டிய மாமியார் கிடைத்ததும் பெருசா எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் போய்விடுகிறார்.

ஆனால் கோபி மட்டும் எப்படி பாக்யாவிற்கு கிடைக்காமல் போன ஆர்டர் மறுபடியும் எப்படி கைக்கு கிடைத்தது என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாத பாக்யா அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை பார்த்து சந்தோஷப்படுகிறார். அந்த நேரத்தில் ராதிகாவும் வருகிறார். அப்பொழுது செல்வி, பாக்யாவிடம் எப்படியோ சாதித்து ஜெயித்துக் காட்டி விட்டாய் என்று சொல்கிறார்.

Also read: சீரியல் டிஆர்பிக்காக இப்படி கேவலமா பண்றாங்க.. சேனல்களை ஒதுக்கி வேறு பாதைக்கு செல்லும் குடும்பப் பெண்கள்

உடனே ராதிகா, பாக்கியாவிடம் வந்து கை கொடுத்து வாழ்த்து சொல்கிறார். அதற்கு பாக்கியா ராதிகாவிடம் இருந்த விரோதத்தை மறந்து பழைய நட்பு ரீதியாக கை கொடுத்து விடுகிறார். இதை பார்க்கும் பொழுது என்றைக்குமே உண்மையான நட்பு ஜெயித்து விடும் என்பதற்கு ஏற்ப இருக்கிறது.

அத்துடன் இதுவரை ராதிகா மக்களின் வெறுப்பை மட்டுமே சம்பாதித்த வந்தார். தற்போது ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு சூப்பர் வெர்பார்மன்சை கொடுக்கிறார். அந்த வகையில் ராதிகாவின் கேரக்டர் தற்போது பார்ப்பதற்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதே போலவே ராதிகாவையும் பாக்கியவையும் பழைய மாதிரி நட்பை வைத்துக் கொண்டு வருவார்கள்.

அதன் மூலம் கோபிக்கு சரியான பாடத்தை இருவரும் கற்றுக் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் கண்டிப்பாக இவர்களுடைய நட்பு கோபிக்கு டேஞ்சராக அமையப் போகிறது. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக பாக்கியா முன்னேறி காட்டிவிட்டார்.

Also read: அப்பத்தாவின் முன் முதலைக்கண்ணீர் வடிக்கும் குணசேகரன்.. வாடி வாசலை தாண்டி சீரும் காளையாக மாறிய மருமகள்கள்