வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

முன்னணி ஹீரோக்கள் கைவிட்டதால் குரங்கை நம்பிய இயக்குனர்.. ரஜினி படத்தால் கிடைத்த அவப்பெயர்

அதிரடியாக களத்தில் இறங்கிய இயக்குனருக்கு அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்கள் கை கொடுத்தன. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு அப்புறம் அந்த இயக்குனரை கட்டம் கட்டினார்கள், நிறைய அவப்பெயர்களை வாங்கி பல பேர் பேச்சுக்கு ஆளானார். இப்பொழுது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அஜித், விஜய் என யாரும் அந்த இயக்குனருக்கு படம் கொடுக்கவில்லை. இவர்கள் ஒதுக்கியதால் பல முன்னணி ஹீரோக்களும் கைவிட்டு விட்டனர். அக்கட தேசத்தில் இவர் நம்பிய ஹீரோக்களும், கால்ஷீட் கொடுத்த ஹீரோக்களும், தமிழ் முன்னணி நடிகர்கள்கைவிட்டதால் அவரது ஃபோனையே எடுக்க மறுத்துள்ளனர்.

Also Read: ஆடியோ லான்சுக்கு ஆப்பு வச்சது போல ட்ரெய்லர் வெளியிட கிளம்பிய சர்ச்சை.. விஜய் மேல அப்படி என்ன காண்டு

தீனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ் .இவரை தற்போது தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஹீரோக்களும் கண்டு கொள்வதே இல்லை. கடைசியாக அல்லு அர்ஜுன் கால் சீட்டும் இவருக்கு கிடைத்திருக்கிறது ஆனால் அவரும் முருகதாஸை இப்பொழுது கண்டு கொள்வதே இல்லை.

இது எல்லாத்துக்கும் மூல காரணம் ரஜினியின் தர்பார் படம் தான் என்கிறார்கள். ரஜினி அப்பொழுது அரசியலுக்கு வருவதற்கு ஒரு அத்திவாரம் போட்டுக் கொண்டிருந்தார். அதனால் எவ்வளவு சீக்கிரம் இந்த படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். அதனால் தர்பார் படம் அவசரமாக எடுக்கப்பட்டு தோல்வியை சந்தித்தது.

Also Read: சாதி சம்மந்தமான படத்தில் விஜய் நடிப்பாரா?. கதை தயார் செய்து வைத்திருக்கும் தனுஷ் பட இயக்குனர்

ரஜினியின் தர்பார் படமும், முருகதாஸின் சரிவுக்கு ஒரு பெரிய காரணம் தான். இதனால் இவர் ஹீரோக்களே வேண்டாம் விலங்கை வைத்து படம் எடுக்கலாம் என்று குரங்கை வைத்து ஒரு கதையை ரெடி பண்ணி விட்டார். அது ஹாலிவுட் தரத்தில் எடுப்பதற்கு எல்லாம் ரெடியாக உள்ளது கூடிய விரைவில் அந்த குரங்கு படத்தை பார்க்கலாம்.

இதனிடையே சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் இவரும் ஒரு ப்ரொடியூசர்.அந்த பழக்கவழக்கத்தில் இப்பொழுது சிவகார்த்திகேயன் இவருக்கு ஒரு படம் கொடுத்திருக்கிறார். குரங்கு படத்திற்கு முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து இப்பொழுது படம் எடுக்க தயாராகி விட்டார்.

Also read: கெட்ட வார்த்தை, வன்முறை, ரத்தம், பயத்தை காட்டிய விஜய்.. ஏமாற்றியதா லியோ ட்ரெய்லர்?

- Advertisement -

Trending News