பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களின் சம்பள லிஸ்ட்.. கோபியை விட பாக்யா வாங்கும் அதிக சம்பளம்

Bhakyalakshmi Serial Celebrities Salary List: ஒரு காலத்தில் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் இடம் பிடித்தது. ஆனால் வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது மட்டமான கதையே வைத்து உருட்டி வருகிறார்கள். அதனால் டிஆர்பி ரேட்டிங் இல் பின்னுக்குப் போய்விட்டது. இருந்தாலும் இந்த நாடகத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று பலரும் பார்த்து வருகிறார்கள்.

அதிலும் தற்போது கோபிக்கும் ராதிகாவிற்கும் பிரச்சனை வரும் விதமாக ஈஸ்வரி ராதிகா வீட்டுக்குள் இருந்து நாட்டாமை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ராதிகா எதிர்ச்சியாக கீழே விழுகிறார். ஆனால் இதற்கு காரணம் கோபியின் அம்மா ஈஸ்வரி தான் என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்ட கோபி, அம்மாவை திட்டிவிட்டு வெளியே அனுப்பி விடுகிறார். கடைசியில் ஈஸ்வரி,பாக்யாவிடம் தஞ்சம் அடைய போய்விட்டார்.

கோபியை விட அதிக சம்பளத்தை வாங்கும் பாக்யா

இதனை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த சூழலில் இதில் நடிக்கும் பிரபலங்களின் சம்பளங்களின் விபரங்கள் வெளியாகி உள்ளது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் பெண்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் நடித்துவரும் பாக்யாவிற்கு ஒரு நாளைக்கு 15000 ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார்.

ஆனால் இவரை விட நடிப்பில் தூள் கிளப்பி வரும் நடிப்பு நாயகன் கோபிக்கு ஒரு நாளைக்கு 12000 சம்பளம் தான். இதே மாதிரி கோபியின் ஆசை மனைவியாக நடித்து வரும் ராதிகாவிற்கும் அதே சம்பளமாக ஒரு நாளைக்கு 12,000 ரூபாய் பெற்று வருகிறார். அடுத்து பாக்கியாவின் மகன்களாக நடித்து வரும் செழியனுக்கு 10000 ரூபாய் மற்றும் எழில் கதாபாத்திரத்தில் புதிதாக நடித்து வருபவர் 8,000 ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.

இவர்களைத் தொடர்ந்து அந்த வீட்டில் செல்ல பிள்ளையாக நடித்து வரும் இனியாவிற்கும் 8000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அடுத்து அவ்வப்போது பாக்யா மீது அதீத காதலை காட்டி வரும் பழனிச்சாமி கேரக்டரில் நடித்து வரும் ரஞ்சித்துக்கு ஒரு நாளைக்கு 30,000 ரூபாய் சம்பளத்தை பெறுகிறார். ஆனால் இவர் அவ்வப்போது தான் வருவதால் பெருசாக இவருடைய சம்பளம் இருக்காது என்று குறிப்பிடத்தக்கது.

பாக்கியலட்சுமி சீரியலின் கதை

Next Story

- Advertisement -