பாக்யாவுக்கு மட்டும் எப்படி தொட்டதெல்லாம் பிரச்சனை?. நடுரோட்டுக்கு வந்த சம்பவம்

Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் பிரபல தொடரான பாக்கியலட்சுமி தொடர் இப்போது ஓரளவு நல்ல டிஆர்பியை பெற்று வருகிறது. வாழ்க்கையில் பிரச்சனை வருவது சாதாரணம் தான். ஆனால் பாக்யாவின் வாழ்க்கையே பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. அவர் எந்த விஷயத்தை தொட்டாலும் ஏதாவது ஒரு சிக்கல் இருக்கிறது.

அப்படி தான் இனியாவை அழைத்துக் கொண்டு டூருக்கு கிளம்புகிறார் பாக்யா. அவருடன் செல்வி மற்றும் ஈஸ்வரி ஆகியோரும் செல்கிறார்கள். இந்த சூழலில் காரை ஓட்டி வந்த டிரைவருக்கு திடீரென ஒரு போன் வருகிறது. அப்போது அவருடைய அப்பாவுக்கு ஏதோ பிரச்சனை என்று சொன்னதால் உடனடியாக பதறிக்கொண்டு இவர்களைப் பாதியிலேயே விட்டுவிட்டு செல்கிறார்.

Also Read : கல்யாண முடிந்த கையுடன் முடிவுக்கு வரும் சீரியல்.. விஜய் டிவியின் மொத்த டிஆர்பிக்கும் சங்கு ஊதிட்டாங்க!

அதன் பிறகு போன் மூலமாக பாக்யாவுக்கு பழனிச்சாமி உத்வேகம் கொடுத்து நீங்களே காரை ஓட்டிச் செல்லுங்கள் என்று கூறுகிறார். இதைத்தொடர்ந்து பாக்யாவும் துணிச்சலுடன் செல்கிறார். மேலும் எழில், செழியன் ஆகியோருக்கு போன் செய்து பேசுகிறார். ஆனால் செழியன் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.

எப்போதுமே போன் செய்யும் போது செழியன் எரிச்சலாக பேசுவதால் பாக்யாவுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து பாக்யா மற்றும் அவரது குடும்பம் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் காரில் பயணிக்கிறார்கள். அப்போது இனியா தனது அப்பா கோபிக்கு போன் செய்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறுகிறார்.

Also Read : எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்குத் தள்ளிய விஜய் டிவி சீரியல்.. ரொமான்ஸில் பின்னி பெடல் எடுக்கும் டாம் அண்ட் ஜெர்ரி

பாக்யா டிரைவிங் கற்றுக்கொண்டு சில நாட்களிலேயே எப்படி பெரிய நகரங்களில் காரை ஓட்டி செல்கிறார் என்று கோபி பொறாமைப்படுகிறார். இந்நிலையில் கார் ஓட்டி சென்ற பாக்யா திடீரென நிறுத்தி விடுகிறார். அதாவது காரில் ஏதோ சிக்கல் இருப்பதால் பாதியிலேயே நின்று விடுகிறது. இதனால் ஈஸ்வரி கோபிக்கு போன் செய்வதாக கூறுகிறார்.

ஆனால் பாக்யா அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இதனால் இனியா, ஈஸ்வரி, செல்வி, பாக்யா நால்வரும் நடுரோட்டில் நிற்கிறார்கள். கண்டிப்பாக இதில் ஏதாவது பிரச்சனையை பாக்யா சந்திக்க இருக்கிறார். ஆனாலும் அதையும் தனது சாமர்த்தியத்தால் எப்படி எதிர்கொள்கிறார் என விறுவிறுப்பான கதைகளத்துடன் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : பத்தி எறிய போகும் பிக் பாஸ் வீடு.. டிஆர்பிக்காக முரட்டு வில்லனை தூக்கிய விஜய் டிவி

Next Story

- Advertisement -