Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவுண்டமணி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டாரு.. அண்ட புளுகு நடிகையின் முகத்திரையை கிழித்த பயில்வான்

தற்போது இவர் கவுண்டமணி குறித்து அபாண்டமாக பேசிய நடிகை ஒருவரின் முகத்திரையை கிழித்துள்ளார்.

goundamani-bayilan

Bayilwan Ranganathan: பயில்வான் ரங்கநாதன் எப்போதுமே மனதில் பட்டதை துணிச்சலாக பேசக்கூடியவர். அதனாலேயே இவர் சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். ஆனாலும் சினிமாவில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெட்ட வெளிச்சமாக்கி வரும் இவரை ரசிகர்களுக்கு பிடிக்கத் தான் செய்கிறது.

அந்த வகையில் தற்போது இவர் கவுண்டமணி குறித்து அபாண்டமாக பேசிய நடிகை ஒருவரின் முகத்திரையை கிழித்துள்ளார். அதாவது சில வாரங்களுக்கு முன்பு நடிகை ஷர்மிலி கவுண்டமணியால் என் சினிமா வாழ்வே நாசமா போச்சு என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

Also read: காமெடி கிங்காக கலக்கிய கவுண்டமணியின் 5 படங்கள்.. ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே மனுஷன்

அது மட்டுமல்லாமல் கவுண்டமணி அவருக்கு வந்த பட வாய்ப்புகளை கெடுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். தற்போது இவருடைய இந்த குற்றச்சாட்டுக்கு பயில்வான் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது கவுண்டமணி உங்களுக்கு ஒரு பிளாட் வாங்கிக் கொடுத்தது மறந்து போச்சா, 1500 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த உங்களுக்கு 50 ஆயிரம் கிடைக்கச் செய்ததும் அவர்தான்.

அவர் மட்டும் இல்லை என்றால் இப்படி ஒரு நடிகை இருப்பது யாருக்கும் தெரியாமலேயே போயிருக்கும். அதையெல்லாம் மறந்து விட்டு தேவையில்லாமல் பேசாதீர்கள் என்று பயில்வான் எச்சரிக்கும் விதமாக பேசி இருக்கிறார். அது மட்டுமின்றி ஷர்மிலி இப்போதுதான் திருமணம் செய்து கொண்டதாகவும், 48 வயதில் குழந்தை பெற போகிறேன் என்றும் கூறியிருந்தார்.

Also read: அப்படியே கவுண்டமணியின் நக்கல், தெனாவட்டு பிடிச்ச ஒரே நடிகர்.. ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் கின்னஸ் நாயகன்

அது பற்றி கூறியிருந்த பயில்வான் சில வருடங்களுக்கு முன்பே ஷர்மிலி வெளிநாட்டில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார். ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கு திரும்பி வந்து விட்டார். ஏனென்றால் அது ஒரு ஒப்பந்த கல்யாணம் என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் உங்களுக்கு ஒரு அடையாளத்தையும், புகழையும் கொடுத்தது கவுண்டமணி தான். வயதில் பெரியவரான அவரைப் பற்றி இப்படி பேசாதீர்கள், தயவு செய்து நீங்கள் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவியுங்கள். இல்லை என்றால் பல விஷயங்கள் வெளியில் வரும் என்று ஆவேசமாக கூறியுள்ளார். தற்போது பயில்வான், ஷர்மிலி பற்றி கூறிய இந்த தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read: கவுண்டமணியால் கேரியரை தொலைத்த 5 நடிகைகள்.. சப்பி போட்ட மாங்கொட்டையாய் தூக்கி எறிந்த காமெடி கிங்

Continue Reading
To Top