காமெடி கிங்காக கலக்கிய கவுண்டமணியின் 5 படங்கள்.. ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே மனுஷன்

Goundamani who paid more than the heroes : 90களில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர்களை விட அதிகமான சம்பளம் வாங்கியுள்ளார் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. கிண்டல் கேள்விகளுக்கு பெயர் போன கவுண்டமணி பல படங்களில் செந்தில் உடன் சேர்ந்து காமெடி ட்ராக்கில் கலக்கியிருப்பார். அதன் பின்னர் ஹீரோக்களுடன் இணைந்து காமெடி செய்ய வாய்ப்புகள் அதிகம் வந்தது. கவுண்டமணியை வைத்து தான் பல படங்கள் அப்போது ஹிட் அடித்தன. அந்த சமயத்தில் பல படங்களில் ஹீரோவை விட அதிக சம்பளம் வாங்கி உள்ளார் கவுண்டமணி. அப்படி அதிக சம்பளம் கொடுத்து அவருடைய கால்ஷீட் பெற்ற படங்கள்.

பெரிய தம்பி : சித்ரா லக்ஷ்மணன் இயக்கத்தில் பிரபு, விஜய்குமார், நக்மா நடித்த வெளிவந்த படம் பெரிய தம்பி. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார் கவுண்டமணி. பிரபு உடன் சேர்ந்து கவுண்டமணி செய்யும் நகைச்சுவை காட்சிகளும் படத்தின் பாடல்களும் படத்திற்கு பிளஸாக அமைந்தது. இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்த சித்ரா லட்சுமணன் பிரபுவை விட கவுண்டமணிக்கு அதிக சம்பளம் வழங்கியுள்ளார்.

Also Read : கவுண்டமணியால் கேரியரை தொலைத்த 5 நடிகைகள்.. சப்பி போட்ட மாங்கொட்டையாய் தூக்கி எறிந்த காமெடி கிங்

நினைவே ஒரு சங்கீதம் : கே. ரங்கராஜுன் இயக்கத்தில் விஜயகாந்த், ராதா, ரேகா, ஸ்ரீவித்யா நடித்த படம் நினைவே ஒரு சங்கீதம் கிட்டத்தட்ட விஜயகாந்துக்கு எதிரான காமெடியுடன் கலந்த வில்லத்தனமான கேரக்டரில் நடித்திருப்பார் கவுண்டமணி. காலரா நோய் பற்றிய விழிப்புணர்வை அந்த சமயத்தில் ஏற்படுத்தியது இப்படம். இந்தப் படத்திற்காக விஜயகாந்தை விட கவுண்டமணிக்கு அதிகமான சம்பளம் கொடுத்து நடிக்க வைத்துள்ளனர்.

நடிகன் : முழு நீள நகைச்சுவை படமான நடிகன் படத்தில் சத்யராஜுடன் சேர்ந்து கவுண்டமணி அடிக்கும் லூட்டி இருக்கிறது அப்பப்பா கேட்கவே வேண்டாம். இப்படம் பி.வாசு இயக்கத்தில் குஷ்பூ, மனோரமா, சின்னி ஜெயந்த் ஆகியோர் நடித்திருந்தனர். பாட்டு வாத்தியாராக வேஷம் போட்டு நடிக்க வரும் சத்யராஜ் கவுண்டமணி உடன் சேர்ந்து வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பார். இந்தப் படத்தில் சத்யராஜை விட கவுண்டமணி தான் அதிகமான சம்பளம் வாங்கியதாக கூறியுள்ளனர்.

Also Read : கவுண்டமணி கூட்டணியில் வெற்றியடைந்த 5 ஹீரோக்கள்.. செந்தில் மார்க்கெட்டை இறக்கிவிட்ட சத்யராஜ்

முறைமாமன் : சுந்தர். சி இயக்கத்தின் முதல் திரைப்படமான இப்படத்தில் ஹீரோவாக ஜெயராம் கவுண்டமணி தம்பியாக நடித்திருப்பார். குஷ்பூ, மனோரமா, செந்தில், கஸன்கான் நடித்திருப்பார்கள். அக்கா மகளான குஷ்பூவை திருமணம் செய்ய ஜெயராமிற்கு உதவி செய்து பல அடிகடிகளை வாங்குவார் கவுண்டமணி. சுந்தர். சி கவுண்டமணியின் ஆதிக்கத்தை தன் முதல் படத்திலேயே சிறப்பாக பயன்படுத்தி சிரிக்க வைத்திருப்பார். இந்த படத்திலும் ஹீரோ ஜெயராமை விட கவுண்டமணிக்கு அதிக சம்பளம்.

சின்னதம்பி : பி. வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ, ஜோடியாகிய படம் சின்னத்தம்பி. ஒருபுறம் இளையராஜாவின் பாடல்கள் படத்திற்கு பெரும்பலம் ஏற்படுத்தியது என்றால் மறுப்புறம் கவுண்டமணியின் காமெடி டிராக் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. இப்படத்தில் மாலைக்கண் நோய் உடையவராய் நடித்திருந்த கவுண்டமணி வரும் ஒவ்வொரு காட்சிகளும் மக்களை சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தது. இந்த படத்தில் கூட நடிகர் பிரபுவை விட கவுண்டமணிக்கு அதிக சம்பளம் பேசியதாக கூறப்படுகிறது.

Also Read : கவுண்டமணியை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலை சொன்ன பி வாசு.. ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்ட பழக்கம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்