அப்படியே கவுண்டமணியின் நக்கல், தெனாவட்டு பிடிச்ச ஒரே நடிகர்.. ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் கின்னஸ் நாயகன்

துவக்கத்தில் 10 படங்களில் கதாநாயகனாக நடித்து அதன் பிறகு வில்லன், குணச்சித்திர நடிகர் ஆக தன்னை அடையாளப்படுத்தினாலும் கவுண்டமணியை காமெடி நடிகராகவே ரசிகர்களுக்கு பிடித்தது. சுமார் இரண்டு தலைமுறை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த கவுண்டமணி 80-களில் இருந்த முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து கலக்கியவர்.

அதிலும் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருக்கக்கூடிய ரஜினி கமலையே படப்பிடிப்பு தளத்தில் கலாய்த்து தள்ளி விடுவார். இதனால் டாப் நடிகர்களும் கவுண்டமணி செட்டில் இருக்கிறார் என தெரிந்ததும் அடக்கி வாசிப்பார்கள். இப்படி பெரிய தலைகளையே கலாய்த்து தள்ளக்கூடிய இவர் இளம் நடிகர்களை விட்டா வைப்பார்.

Also Read: கவுண்டமணியால் இப்போது தான் கர்ப்பமானேன்.. 48 வயதில் குழந்தை பெற போகும் ஷர்மிலி

அஜித் முதல் சிம்பு வரை அனைவரையும் சினிமாவில் ஓட்டி தள்ளி விடுவார். இவருடைய நக்கலும் தெனாவட்டும் அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல இருப்பவர் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம். இவர் சுமார் 1000 படங்களுக்கு மேல் மிகக் குறுகிய காலத்திலேயே நடித்த காரணத்தால் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

இவர் என்னதான் தெலுங்கு நடிகராக இருந்தாலும் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பிரித்விராஜ், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான மொழி படத்தில் இவர் நடித்திருப்பார். பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்டின் செக்ரட்டரியாக தோன்றி தனது நகைச்சுவையால் படத்தை பார்ப்போரை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பார்.

Also Read: கவுண்டமணியால் கேரியரை தொலைத்த 5 நடிகைகள்.. சப்பி போட்ட மாங்கொட்டையாய் தூக்கி எறிந்த காமெடி கிங் என பன்முகத் திறமை கொண்டவர்

இவருக்குள் இருக்கும் நக்கல், தெனாவட்டு எல்லாவற்றையும் பார்க்கும்போது கவுண்டமணியை பார்க்கிறது போலவே இருக்கிறது என்றும் இவருடன் பழகிய பல தமிழ் நடிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்ல இவர் சில விஷயங்களில் கவுண்டமணியையே மிஞ்சும் அளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுபவர்.

இவர் கின்னஸ் சாதனை மட்டுமல்ல கௌரவ டாக்டர் பட்டம், பத்மஸ்ரீ விருது, செவாலியர் விருது பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல இந்தியாவிலும் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நகைச்சுவை நடிகர்களில் பிரம்மானந்தமும் ஒருவர். இவர் நடிப்பு மட்டுமல்ல அமெச்சூர் சிற்பி மற்றும் ஓவியக் கலைஞரும் ஆவார்.

Also Read: நக்கல், நையாண்டிக்கு பெயர் போன 5 நடிகர்கள்.. 6 மணிக்கு மேல் மணிவண்ணனுடன் எடுக்கும் அவதாரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்