புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

4 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த பசங்க பட நட்சத்திரம்.. டிரெண்டாகும் போட்டோஸ்

கடந்த 2009 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பசங்க. விமல், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. அதை தொடர்ந்து அப்படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரங்களும் தற்போது ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் அனைவராலும் கவனிக்கப்பட்ட நடிகர் தான் கிஷோர். பசங்க திரைப்படத்தின் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்ற அவர் ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது அவருடைய திருமண புகைப்படம் சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கிறது.

Also read: இணையத்தை தெறிக்க விடும் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. கடும் போட்டியாளராக மாறிய ஜீ தமிழ்

அந்த வகையில் சீரியல் நடிகையான ப்ரீத்தி குமாரை காதலித்து வந்த இவர் தற்போது அவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் பொன்னி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரீத்தி சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு விலகினார்.

திருமணத்தில் இணைந்த ப்ரீத்தி-கிஷோர்

kishore-preethi
kishore-preethi

அதை தொடர்ந்து தற்போது அவர் சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் இவர்களுடைய காதல் விவகாரம் சோசியல் மீடியாவில் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது. அதற்கு முக்கிய காரணம் ப்ரீத்தி கிஷோரை விட நான்கு வயது அதிகமானவர் என்பது தான். இது சில விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் இந்த ஜோடி அடிக்கடி தங்களின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தனர்.

Also read: முழு நேர வேலையாகவும் காதலித்த ஜெமினியின் 5 படங்கள்.. வசீகரா பேச்சால் கவர்ந்த காதல் மன்னன்

இந்நிலையில் தற்போது திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் இவர்களுக்கு ரசிகர்கள் உட்பட சின்னத்திரை, பெரிய திரை பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய திருமண கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

திருமணமான பூரிப்பில் ப்ரீத்தி-கிஷோர்

preethi-kishore
preethi-kishore

அதில் இந்த ஜோடிகள் திருமணமான பூரிப்பில் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கின்றனர். அதிலும் மகிழ்ச்சியுடன் திருமண சடங்கு ஒவ்வொன்றையும் அவர்கள் செய்யும் வீடியோக்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அந்த வகையில் இவர்களுடைய திருமணம் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும் இந்த ஜோடி தற்போது மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

Also read: குணச்சித்திர கேரக்டரில் வெற்றி கண்ட வடிவேலுவின் 5 படங்கள்.. உடன்பிறப்பிற்காக உயிரையே விட்ட ஹீரோ

- Advertisement -

Trending News