Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் நாளுக்கு நாள் கோபியின் அராஜகம் கூடிக் கொண்டே போகிறது. முக்கியமாக பாக்கியா தனக்கு எந்த விதத்திலும் செட்டாகாது என்று உதறித் தள்ளிவிட்டு ராதிகாவின் பின்னாடி போன கோபி தற்போது வரை நிம்மதி இல்லாமல் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார்.
அதுவும் எப்படி அவரை எந்த விதத்தில் பழிவாங்கலாம் என்று முழு நேரமும் பாக்யாவை மனதில் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு வேலையும் செய்கிறார். அந்த வகையில் பாக்யாவை எப்படியாவது இரண்டு நாளில் போலீஸ் ஸ்டேஷனில் தவிக்க விடணும் என்று திருட்டுத்தனமாக வீட்டிற்கு போய் பாக்யாவின் லைசென்சை உடைத்து போட்டு விட்டார்.
Also read: மொத்த குடும்பத்திடமும் அசிங்கப்பட போகும் கோபி.. தலை தப்பிய பாக்யா
அத்துடன் சும்மா இல்லாமல் பாக்கியாவின் வீட்டிற்கு சென்று தன்னுடைய குடும்பத்தின் முன்னாடி பழனிச்சாமியை சேர்த்து வைத்து தவறாக பேசி விடுகிறார். அந்த நேரத்தில் எழில் வந்து கோபி செய்த அத்தனை அட்டூழியமான விஷயங்களையும் புட்டு புட்டு வைத்து விடுகிறார். இதனால் கோபியின் அம்மா, அப்பா மற்றும் பாக்கியா காரி துப்பாத குறையாக கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.
இந்த கோபி எத்தனை தடவை அவமானப்பட்டாலும் திருந்தவே மாட்டார் போல, மறுபடியும் மறுபடியும் தேடிப்போய் அசிங்கப்படுவதையே வேலையா வைத்திருக்கிறார். அத்துடன் வீட்டிற்கு போனதும் ராதிகாவிடம் நல்ல புருஷனாக நடிச்சு விடுகிறார். ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கோபி சைக்கோவாக மாறி கொண்டு வருகிறார்.
அடுத்தபடியாக பாக்கியா, கோபியை நேரில் பார்த்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி என்னுடைய விஷயத்தில் இனி நீங்கள் தலையிட்டால் நடக்கிற காரியமே வேற என்று வார்னிங் கொடுத்து விடுகிறார். மேலும் கோபியின் ஆபிஸிற்கே சென்று பாக்யா மிரட்டுகிறார். இனியும் இந்த கோபி பாக்கியாவிடம் வம்பு வைத்தால் இவருடைய கெதி மொத்தமாக அதோ கெதி தான்.
இதனைத் தொடர்ந்து பாக்யாவை எதேர்ச்சியாக அமுதாவின் முன்னாள் கணவர் பார்த்து விடுகிறார். இவரை பார்த்ததும் பாக்யாவும் அதிர்ச்சியாகி விடுகிறார். ஒருவேளை பாக்யாவிற்கு அமிர்தாவின் கணவர் இவர் தான் என்று தெரிந்தால் அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது கொஞ்சம் புரியாத புதிராக இருக்கிறது.
Also read: ஜெனிக்கு துரோகம் செய்யும் செழியன்.. பொம்பள சோக்கு கோபியை அப்படியே உரிச்சு வச்சிருக்காரு