யாருக்கும் தெரியாமல் குழந்தையை தூக்கிட்டு போகும் பாக்கியாவின் மாமி.. வீட்டை விட்டு வெளியேறிய ராஜி

Bhakkiyalakshmi and Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 இந்த வாரம் சங்கமமாக இணைந்து இருக்கிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா சமையல் ஆர்டர்காக திருச்செந்தூருக்கு எழில் மற்றும் அமிர்தாவை கூட்டிட்டு போயிருக்கிறார்.

அதே மாதிரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து பாண்டியனின் மனைவி கோமதி, மருமகள் மீனா மற்றும் மகன் கதிர் அனைவரும் கோவிலுக்காக திருச்செந்தூர் போயிருக்கிறார்கள். போன இடத்தில் இரண்டு குடும்பமும் சந்தித்து பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் இங்கே வீட்டில் இருக்கும் கோமதியின் அண்ணன் மகளுக்கு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது.

இந்த திருமணத்திற்கு ராதிகா, கோபி மற்றும் இனியா வந்திருக்கிறார்கள். வந்திருக்கும் இடத்தில் கோபிக்கும் பாண்டியனுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அதே மாதிரி ஜெனி குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியை ஜெனியோட அப்பா ஏற்பாடு பண்ணுகிறார். இதை தெரிந்த பாக்கியாவின் மாமியார் நம்மகிட்ட ஏதும் கேட்காமல் அவர் இஷ்டத்துக்கு எப்படி இதை பண்ணலாம் என்று செழியனை கூட்டிட்டு அங்கே போகிறார்.

Also read: ஜனனியை பழிவாங்க போட்ட மாஸ்டர் பிளான்.. குணசேகரன் கூடவே இருந்து குழி பறிக்க போகும் துரோகி

போன இடத்தில் யாருக்கும் தெரியாமல் குழந்தையே தூக்கிக்கொண்டு அங்கு இருப்பவர்களிடம் இந்த பங்க்ஷன் நடக்காது என்று சொல்லி வந்து விடுகிறார். இதனை அடுத்து ராஜிக்கு ஏற்பாடு பண்ண திருமணத்தில் அவருக்கு சந்தோஷம் இல்லை என்பதை ராதிகா புரிந்து கொண்டார். அதனால் ராஜிடம் ராதிகா பேசுகிறார். பின்பு ராஜி யாருக்கும் தெரியாமல் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இதனை தொடர்ந்து ராஜி திருமணம் நிற்கப் போகிறது. அடுத்து குழந்தையை கேட்டு ஜெனி அப்பா பாக்கியாவின் மாமியாரிடம் சண்டை போடப் போகிறார். இங்கே தான் எல்லா பிரச்சனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி ஆகப்போகிறது. அதாவது ஜெனி இந்த சூழலில் மனதை மாற்றிக் கொண்டு செழியுடன் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதே மாதிரி ராஜியும் காதலன் தப்பானவர் என்பதை புரிந்து கொண்டு வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லப் போகிறார். அதன் பிறகு எப்படி ராஜி மற்றும் கதிர் ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் இந்த நாடகத்தின் மீதமுள்ள கதையாக இருக்கும்.

Also read: ஆதி குணசேகரனுக்கு எதிரா திரும்பும் 3 பேர்.. பாம்பு விஷத்தை விட கொடூரமாய் மாறிய வளர்த்த கை

- Advertisement -spot_img

Trending News