ஆதி குணசேகரனுக்கு எதிரா திரும்பும் 3 பேர்.. பாம்பு விஷத்தை விட கொடூரமாய் மாறிய வளர்த்த கை

3 people who turn against Athi Gunasekaran: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் உச்சகட்ட ஆணாதிக்கத்துடன் பெண்களை அடிமையாக நடத்தி அவர்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே லாய்க்கு என்று வன்மத்தை காட்டி வருகிறார். அப்படிப்பட்ட இவர் என்ன செய்தாலும் அது சரிதான் என்று கண்மூடித்தனமாக கதிர் மற்றும் ஞானம் அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டார்.

இதில் ஞானத்தை விட அதிகமாக கதிர் தான் குணசேகரன் என்ன சொன்னாலும் தலையாட்டிக் வந்தார். ஆனால் தற்போது கை கால் உடைந்து உடம்பில் தெம்பில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் தன் மனைவியின் அருமையை புரிந்து கொண்டார். அத்துடன் குடும்பம்னா என்ன பாசம் என்றால் என்னவென்று நன்றாக உணர்ந்து விட்டார்.

அதனால் என்னமோ தற்போது கதிர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறார். முக்கியமாக குணசேகரன், தர்ஷினியை கரிகாலனுக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிய பொழுது, தர்ஷினி சின்ன குழந்தை அவளுக்கு இப்போது இந்த கல்யாணம் தேவையா? முதலில் நம்ம குழந்தை எங்கே என்று கண்டுபிடிப்போம் என குணசேகரனிடம் கதிர் கூறுகிறார்.

Also read: ஓவராக அலப்பறை பண்ணும் விஜயா.. முத்துவிடம் கையும் களவுமாய் மாட்டப் போகும் ரோகினியின் மாமா

இதைக் கேட்ட குணசேகரன் உன் பொண்டாட்டி என்ன தலையண மந்திரம் போட்டு விட்டாளா? உன்னால சொந்தமா ஒரு காசு சம்பாதிக்க முடியாது. போதாக்குறைக்கு கை கால் அடிபட்டு நொண்டி ஆகிட்ட என்று கதிரை மட்டம் தட்டி பேசுகிறார். உடனே கதிர் நீ மாறு இல்லையென்றால் என்ன மாறவிடு என்று குணசேகரனை எதிர்த்து பேசி விட்டார். இதுவரை கதிரை ஒரு அல்ல கையாகவும், வேட்டை நாயகாவும் குணசேகரன் பயன்படுத்தி வந்தார். ஆனால் தற்போது கதிர், குணசேகரனுக்கு எதிராக திரும்பி விட்டார்.

இவரைத் தொடர்ந்து ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் போலீஸிடம் அடி வாங்கியதால், தற்போது ஜான்சி ராணியும் மறைமுகமாக குணசேகரனை பழிக்கு பழி வாங்கப் போகிறார். குணசேகரன் கூடவே இருந்து குழி பறிக்க வேண்டும் என்று. அதுபோல குணசேகரன் குடும்பத்தை பழி வாங்குவதற்காக பாம்பு போல் படையெடுக்கப் போகிறார்.

குணசேகரனுக்கும் தற்போது வேறு வழி இல்லை, ஏனென்றால் தான் வளர்த்த தம்பி கதிர் தனக்கு எதிராக மாறிவிட்டார். அதனால் தனி மரமாக நிற்கும் நிலைமை வந்துவிட்டது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி குணசேகரனை மறைமுகமாக தாக்கப் போகிறார் ஜான்சி ராணி. ஆக மொத்தத்தில் இனி தான் குணசேகரனுக்கு ஒவ்வொரு அடியும் இடியாக விழப்போகிறது.

Also read: மாரிமுத்து கேரக்டரை ஈடுகெட்ட போகும் நந்தினியின் கணவர்.. செல்லா காசாக விழி பிதுங்கி நிற்கும் குணசேகரன்

- Advertisement -spot_img

Trending News